அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல்களின் இருபத்தி இரண்டாம் ஆண்டு நினைவு தினமான செப்டம்பர் 11, 2023 அன்று, நியூயார்க் நகரத்திற்கு மேலே ஒரு அற்புதமான இரட்டை வானவில் வானத்தை அலங்கரித்தது. முன்னாள் இரட்டை கோபுரங்களின் தாயகமான இந்த நகரம் தாக்குதல்களில் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தது. இரண்டு தசாப்தங்கள் கடந்த பின்பு, அங்கே தோன்றிய இரட்டை வானவில் அங்கிருந்தவர்களுக்கு ஒரு நம்பிக்கையையும் குணப்படுத்துதலையும் தந்தது. இந்த தருணத்தின் வீடியோ கிளிப் உலக வர்த்தக மையத்தின் தளத்திலிருந்து வெளிப்படும் வானவில்களைப் படம்பிடிப்பது போல் தோன்றியது.

வானத்தில் உள்ள வானவில்கள் நோவாவின் காலத்திலிருந்து கடவுளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன. ஜனங்களுடைய பாவத்தினிமித்தம் பற்றயெரிந்த தேவ கோபமானது ஏற்படுத்திய உலகளாவிய விளைவை ஏற்படுத்தியது. அதை தேவன் நினைவுகூரும் விதமாக வண்ணமயமான வானவில் “தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப் பார்ப்பேன்” (ஆதியாகமம் 9:16) என்று தேவன் ஏற்படுத்துகிறார். நாற்பது நாட்கள் மழை வெள்ளத்திற்குப் பிறகு (7:17-24), தேவனுடைய உடன்படிக்கையின் அடையாளமாய் ஏற்படுத்தப்பட்ட வானவில்லை பார்த்தமாத்திரத்தில் நோவாவின் குடும்பத்தினர் எவ்விதமாய் வரவேற்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கக்கூடும் (9:12-13). “பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்று” (வச. 11) தேவன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்கிறார். 

இயற்கை பேரழிவு, உடல் அல்லது உணர்ச்சி வலி அல்லது நோயின் அவலநிலை போன்ற இருண்ட நாட்களையும் சோகமான இழப்புகளையும் நாம் சந்திக்கும் போது, அதன் மத்தியில் நம்பிக்கைக்காக நாம் தேவனை நோக்கிப் பார்ப்போம். அந்தத் தருணங்களில் அவருடைய வானவில்லை நாம் காணாவிட்டாலும், அவருடைய வாக்குறுதிகளுக்கு அவர் உண்மையுள்ளவர் என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.