எனது நண்பன் ஜெரியின் வேலை ஸ்தலத்தில் சிறிய இடைவேளையில் ஒன்றாக மதிய உணவு சாப்பிடுவதற்காக ஒரு துரித உணவு விடுதிக்கு விரைந்தோம். அதே நேரத்தில் வாசலில் வந்த ஆறு இளைஞர்கள் எங்களுக்கு முன்னால் உள்ளே நுழைந்தனர். எங்களுக்கு அதிக நேரம் இல்லை என்பதை அறிந்து, உள்ளுக்குள் முணுமுணுத்தோம். அவர்கள் ஒவ்வொருவரும் முதலில் ஆர்டர் செய்யலாம் என்பதை உறுதிப்படுத்த இரு வரிசைகளிலும் ஒரு குழுவாக நின்றார்கள். “இப்போது கிருபை காண்பியுங்கள்” என்று ஜெரி தனக்குத்தானே கிசுகிசுப்பதை நான் கேட்டேன். ஆஹா! நிச்சயமாக, முதலில் எங்கள் தேவைகள் சந்திக்க நாங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் எங்களுக்கு நலமானதாக இருந்திருக்கும். ஆனால் என்னுடையது மட்டுமல்ல, மற்றவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பற்றி சிந்திக்க எங்களுக்கு ஒரு சிறந்த நினைவூட்டலாக அத்தருணம் அமைந்தது.
அன்பு “அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது” (1 கொரிந்தியர் 13:5) என்று வேதம் போதிக்கிறது. “அடிக்கடி . . . மற்றவர்களின் நலன், திருப்தி, நன்மை ஆகியவற்றைத் தனக்கென விரும்புகிறது,” என்று இந்த அன்பைப் பற்றி வேத விளக்கவுரையாளர் மேத்யூ ஹென்றி எழுதுகிறார். தேவனுடைய அன்பு மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
நம்மில் பலர் எளிதில் எரிச்சலடையும் ஒரு உலகில், மற்றவர்களிடம் பொறுமையாக இருப்பதற்கும் கருணை காட்டுவதற்கும் தேவனிடத்தில் உதவி மற்றும் கிருபையை அடிக்கடி கேட்கிறோம் (வச. 4). நீதிமொழிகள் 19:11, “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை” என்று கூறுகிறது.
அதுதான் கடவுளுக்கு கனம் தரும் அன்பான செயல், மேலும் அவர் தனது அன்பைப் பற்றிய எண்ணங்களை மற்றவர்களுக்குக் கொண்டு வர அதைப் பயன்படுத்தலாம்.
தேவனுடைய பலத்துடன், இப்போது மற்றவர்களுக்கு கருணை காண்பிக்க ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வோம்.
எந்த வழிகளில் நீங்கள் விரக்தியிலிருந்து செயல்படாமல் இருக்க வேண்டும்? தேவனிடம் திரும்புவது உங்களுக்கு எப்படி உதவக்கூடும்?
தேவனே, எனக்கு உம்முடைய உதவி தேவை. நான் பல நிலைகளில் எரிச்சலை எதிர்கொள்கிறேன். ஆனால் அதற்கு பதிலாக உம்முடைய அன்பினால் நிரம்ப விரும்புகிறேன்