எங்கள் விருந்துக்கு நாள் நெருங்கியதும், நானும் என் மனைவியும் திட்டமிட ஆரம்பித்தோம். நிறைய பேர் வருவதால், சமையல்காரரிடம் பணம் கொடுத்து சமைக்க வேண்டுமா? சமையலை நாமே செய்தால் பெரிய அடுப்பு வாங்க வேண்டுமா? அன்றைய தினம் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், நாம் கூடாரம் ஏதும் போட வேண்டியிருக்குமா? விரைவில் எங்கள் விருந்தின் செலவு உயர்ந்தது. எல்லாவற்றையும் நாமே வழங்க முயற்சிப்பதால், மற்றவர்களின் உதவியைப் பெறுவதற்கான வாய்ப்பை இழக்கிறோம்.
சமூகத்தைப் பற்றிய வேதாகமத்தின் தரிசனம், கொடுக்கல் வாங்கல் இரண்டியும் உடையதாகும். பாவத்தில் விழுவதற்கு முன்பே, ஆதாமுக்கு உதவி தேவைப்பட்டது (ஆதியாகமம் 2:18). மற்றவர்களின் ஆலோசனையைப் பெறவும் (நீதிமொழிகள் 15:22) மற்றும் நமது சுமைகளைப் பகிர்ந்து கொள்ளவும் (கலாத்தியர் 6:2) நாம் அழைக்கப்பட்டுள்ளோம். ஆதித்திருச்சபை “சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்” (அப்போஸ்தலர் 2:44-45). சுயநலமாய் வாழ்வதற்குப் பதிலாக, அழகான ஒன்றையொன்று சார்ந்து பகிர்ந்து கொண்டார்கள், பெற்றுக்கொண்டனர், கொடுத்தனர்.
எங்கள் விருந்துக்கு ஒரு பலகாரம் அல்லது இனிப்பை கொண்டு வரும்படி விருந்தினர்களிடம் கேட்டோம். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் பெரிய அடுப்பைக் கொண்டு வந்தார்கள், ஒரு நண்பர் கூடாரம் போட உதவிசெய்தார். உதவி கேட்பது நெருங்கிய உறவுகளை உருவாக்க எங்களுக்கு உதவியது, மேலும் மக்கள் செய்த உணவு வகைகளையும் மகிழ்ச்சியையும் தந்தது. நம்மைப் போன்ற ஒரு காலத்தில், தன்னிறைவு பெற்றிருப்பது பெருமைக்குரியதாக இருக்கும். ஆனால் தேவனிடத்தில் தாழ்மையோடு உதவிகேட்பவர்களுக்கு, தேவன் தம்முடைய கிருபையை கொடுக்கிறார் (யாக்கோபு 4:6).
உதவி கேட்பதிலிருந்து உங்களைத் தடுப்பது எது? விலைகொடுத்து வாங்குவதற்கு பதிலாக உதவி வாங்குவதற்கு உங்களுக்கு தற்போது என்ன தேவை?
தேவனே, எங்களை உறவுள்ள உயிரினங்களாக மாற்றியதற்கு நன்றி. என்னுடைய செல்வம் மற்றும் தேவைகள் இரண்டையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு பணிவுடன் வாழ எனக்கு உதவிசெய்யும்.