ஜேம்ஸ் இந்நெல் பேக்கர், ஜே. ஐ. பேக்கர் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். 2020 இல் தனது தொண்ணூற்றுநான்காவது பிறந்தநாளுக்கு ஐந்து நாட்களே இருந்த நிலையில் மரித்தார். அறிஞரும் எழுத்தாளருமான அவருடைய சிறந்த புத்தகமான, நோயிங் காட், வெளியிடப்பட்டு 1.5 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளன. வேதாகமத்தின் அதிகாரம் மற்றும் சீடர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் மிகவும் தேர்ச்சிபெற்ற பேக்கர், எல்லா இடங்களிலும் உள்ள கிறிஸ்துவின் விசுவாசிகளை இயேசுவுக்காக வாழ்வதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். அவரது மரண தறுவாயில், சபைக்கான அவரது இறுதி வார்த்தைகளைக் கேட்டனர்; பேக்கருக்கு ஒரு வரி கூறினார், வெறும் நான்கு வார்த்தைகள்: “கிறிஸ்துவை எல்லா வழிகளிலும் மகிமைப்படுத்துங்கள்”.

அந்த வார்த்தைகள் அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன, அவரது வியத்தகு மனமாற்றத்திற்குப் பிறகு, அவருக்கு நியமிக்கப்பட்ட பணியை உண்மையுடன் செய்யத் தொடங்கினார் மேலும் அதன் விளைவுகளைத் தேவனிடம் விட்டுவிட்டார். முழு புதிய ஏற்பாட்டிலும் ரோமர் புத்தகத்தில் காணப்படும் பவுலின் வார்த்தைகள் மிகவும் இறையியல் ரீதியாக நிரம்பியவையாகும். மேலும் பேக்கர், அப்போஸ்தலன் எழுதியதை போலவே, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு” (15:6 ) என்று கிட்டத்தட்ட இவரும் சுருக்கமாகக் கூறுகிறார்.

பவுலின் வாழ்க்கை நமக்கு ஒரு உதாரணம். நாம் பல வழிகளில் தேவனை மகிமைப்படுத்தலாம் (கனப்படுத்தலாம்), அதில் ஒன்று நமக்கு முன் வைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதன் மூலமும் அதன் முடிவுகளைத் தேவனின் மாறாத கரங்களில் விட்டுவிடுவதும் ஆகும். புத்தகங்களை எழுதுவதோ அல்லது மிஷனரிகளாக செல்வதோ அல்லது சிறுவர்களுக்குப் பாடம் கற்பிப்பதோ அல்லது வயதான பெற்றோரைப் பராமரிப்பதோ, எதுவாயினும் ஒரே நோக்கம்: கிறிஸ்துவை எல்லா வழிகளிலும் மகிமைப்படுத்துங்கள்.  நாம் ஜெபித்து, வேதத்தை வாசிக்கும்போது அர்ப்பணிப்புள்ள கீழ்ப்படிதலுடன் வாழவும், நாம் சொல்கிற, செய்கிற எல்லாவற்றிலும் இயேசுவைக் கனம்பண்ணும் வகையில் நம்முடைய அன்றாட வாழ்க்கையைத் தொடர தேவன் நமக்கு உதவுகிறார்.