எங்கள் பள்ளிக் காப்பாளரான பென்ஜி எங்களோடு மதிய உணவு சாப்பிட  வருவதற்குத் தாமதமாகும் என்றறிந்த எனது இறையியல் பேராசிரியரான டாக்டர் லீ, ​​அவர் அமைதியாக அவருக்காக ஒரு தட்டில் உணவை எடுத்து வைத்தார். நானும் எனது வகுப்புத் தோழர்களும் பேசிக்கொண்டிருக்கும்போது, ​​டாக்டர் லீ அவருக்காக ஒரு தட்டில் அரிசிச் சாதத்தின் கடைசி பிடியையும் அமைதியாக எடுத்து வைத்தார், அதன்மீது சிறிது துருவிய தேங்காயைச் சுவையான சட்டினியாகச் சேர்த்தார். ஒரு சிறந்த இறையியலாளர் ஒருவரின் பல அன்பான செயல்களில் இதுவும் ஒன்று, மேலும் டாக்டர் லீ தேவன் மீது கொண்டிருந்த உண்மைத்தன்மை என் ஆசிரியர் என்மீது ஏற்படுத்திய தாக்கமும், காயுவும் தனது காலத்தில் ஏற்படுத்திய தாக்கமும், நாம் மற்றவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கான ஆற்றல் வாய்ந்த நினைவூட்டல்கள், இதனைப் பயன்படுத்தி தேவன் பிறரை கிறிஸ்துவிடமாய் திருப்பலாம். நாம் தேவனுடன் உண்மையாக நடக்கும்போது, ​​பிற விசுவாசிகளும் அவருடன் உண்மையாக நடக்க உதவும் வகையில் வாழ்வோம், செயல்படுவோம். வழிந்தோடுவதாகவே இதனை நான் கருதுகிறேன். இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் என் மீது ஏற்படுத்திய ஆழமான தாக்கம் அப்படியே இருக்கிறது.

அப்போஸ்தலன் யோவானுக்கும் ஒரு அன்பான நண்பர் இருந்தார், அவர் பல விசுவாசிகளின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். தேவனுக்கும் வேதவாக்கியங்களுக்கும் உண்மையுள்ளவர், தொடர்ந்து “சத்தியத்தின்படி” (3 யோவான் 1:3) நடப்பவர் என்று அவர்கள் காயுவை குறித்தே பேசினர். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் அந்நியரான பிரசங்கிகள் அரதேசிகளாய் இருந்தாலும் அவர்களை காயு உபசரித்தார் (வ.5). இதன் விளைவாக, யோவான் அவரிடம், “அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சிசொன்னார்கள்” (வ. 6) என்றார். தேவன்மீதும் இயேசுவின் மற்ற விசுவாசிகள் மீதுமான காயுவின் உண்மைத்தன்மை, நற்செய்தியை மேலும் பரவிட உதவியது.

என் ஆசிரியர் என்மீது ஏற்படுத்திய தாக்கமும், காயுவும் அவரது காலத்தில் ஏற்படுத்திய தாக்கமும், நாம் மற்றவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கான ஆற்றல் வாய்ந்த அடையாளங்கள். நாம் தேவனுடன் உண்மையாக நடக்கையில், ​​பிற விசுவாசிகளும் அவருடன் உண்மையாக நடக்க உதவும் வகையில் வாழ்வோம், செயல்படுவோம்.