அழகான மணமகள், தனது பெருமிதமான தந்தையின் கையைப் பற்றிக் கொண்டு, பலிபீடத்திற்குச் செல்லத் தயாராக இருந்தாள். ஆனால் அவளுடைய பதின்மூன்று மாத தமக்கையின் மகன் அவளை முந்திக்கொண்டான். பொதுவாக உபயோகிக்கும் “மோதிரத்தை” எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவன் வேதாகமத்தை ஏந்திக்கொண்டிருந்தான். இந்த முறையில் மணமகனும், மணமகளும், இயேசுவின் உறுதியான விசுவாசிகளாக, வேதாகமத்தின் மீதான தங்கள் அன்பிற்கு சாட்சியமளிக்க விரும்பினர். பெரிதாய் கவனம் சிதறாமல், அந்த பிள்ளையும் குறுநடை போட்டு சபையின் முன்புறம் சென்றது. வேதாகமத்தின் தோல் அட்டையில் காணப்பட்ட சின்னஞ்சிறு குழந்தையின் பற்களின் அடையாளங்கள் எவ்வளவு அழகாய் இருந்தது. கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு அல்லது அவரை அறிய விரும்புபவர்களுக்கு வேதத்தைச் சுவைத்து எடுப்பதைக் காண்பிக்கச் செயல் விளக்கமாகும் சித்திரம்.

சங்கீதம் 119, வேதாகமத்தின் விஸ்தாரமான மதிப்பைப் போற்றுகிறது. கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிறவர்களின் (வ.1)  ஆசீர்வாதத்தை அறிவித்த பிறகு, ஆசிரியர் கவிதை நடையில் அதைப் பற்றி முழங்கினார், அதில் அதின் மீதான அவரது அன்பும் அடங்கும். “இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்” (வ.159); “பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.” (வ.163); “என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்” (வ.167)

தேவன் மீதும் அவரது வார்த்தையின் மீதும் உள்ள நமது அன்பை எவ்வாறு வாழ்ந்து காட்டுகிறோம் என்பதை நாம் எத்தகைய வண்ணம் அறிவிக்கிறோம்? அவர் மீதான நம் அன்பைச் சோதிப்பதற்கான ஒரு வழி என்னவென்றால், நான் எதில் பங்குகொள்கிறேன்? நான் வேதத்தின் இனிமையான வார்த்தைகளை “சுவைக்கிறேனா”? என்று நம்மை நாமே ஆராய்வதாகும். பின்னர் “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்”  (34:8) என்ற இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.