அமெரிக்காவின் பெரும் பொருளியல் வீழ்ச்சியின்போது, ஸ்ட் பெளவுல் எனப்பட்ட மணல் புயல்கள் அங்கு பேரழிவை ஏற்படுத்துகையில், கன்சாஸின் ஹியாவதாவில் வசிக்கும் ஜான்மில்பர்ன் டேவிஸ் தனக்கென ஒரு பெயரை சம்பாதிக்க முடிவு செய்தார். குழந்தைகள் இல்லாத அவர் தானே சம்பாதித்து கோடீஸ்வரர் ஆனார். டேவிஸ், சேவை அல்லது பொருளாதார வளர்ச்சியில் முதலீடு செய்திருக்கலாம். அதற்கு பதிலாக, பெரும் செலவில், அவர் தனக்கு ஒரு சிலையும் மற்றும் தனது இறந்த மனைவியின் பதினொரு பெரிய சிலைகளை உள்ளூர் கல்லறையில் நிறுவ ஏற்பாடு செய்தார்.
“கன்சாஸில் என்னை வெறுக்கிறார்கள்” என்று டேவிஸ் பத்திரிகையாளர் எர்னி பைலிடம் கூறினார். மருத்துவமனை, நீச்சல் குளம் அல்லது பூங்கா போன்ற பொது வசதிகளை கட்டுவதற்கு அவர் நிதியளிக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் விரும்பினர். ஆனால் அவர் சொன்னது என்னவென்றால், “இது என் பணம், நான் விரும்பியபடி செலவிடுகிறேன்.”
சாலொமோன் ராஜா, அவருடைய காலத்தின் பெருஞ்செல்வந்தராக இவ்வாறு எழுதினார், “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை” என்றும் “பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்” (பிரசங்கி 5:10–11). செல்வத்தின் கெடுக்கும் போக்குகளை சாலொமோன் நன்கு அறிந்திருந்தார். அப்போஸ்தலன் பவுலும் செல்வத்தின் சோதனையைப் புரிந்துகொண்டு, இயேசுவுக்குக் கீழ்ப்படிய தன் வாழ்க்கையை முதலீடு செய்யத் தேர்ந்தெடுத்தார். ரோமானிய சிறைச்சாலையில் மரணதண்டனைக்காகக் காத்திருந்த அவர், ஜெயம்பெற்றவராக, “நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்…. ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோத்தேயு 4:6-7) என்று எழுதினார்.
நமக்காக நாம் சிலை வைப்பதும் அல்லது சேர்த்து வைப்பதும் நீடிக்காது. ஒருவருக்கொருவர் மற்றும் கிறிஸ்துவுக்காக கொடுப்பதே நீடிக்கும். எப்படி நேசிக்க வேண்டும் என்பதைக் காட்டுபவர் அவரே.
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைவில் கொள்வார்கள்? உங்களின் நித்திய மரபைச் சிந்திக்கையில் நீங்கள் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்?
பரலோகத் தகப்பனே, இன்றே சிறிய அளவிலாவது என் வாழ்க்கையை மற்றவர்களுக்குச் செலவிட எனக்கு உதவும்.