பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், மேரி மெக்டோவல் சிகாகோவின் கொடூரமான பட்டிகளை அறியாமல் வாழ்ந்தார். அவரது வீடு இருபது மைல்களுக்கு அப்பால் இருந்தபோதிலும், பட்டிகளில் உள்ள தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யத் தூண்டிய கொடூரமான அவர்களின் நிலைமைகள் பற்றி அவளுக்குத் தெரியாது. அவர்களும் அவர்களது குடும்பங்களும் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி அறிந்தவுடன், மெக்டொவல் அவர்கள் மத்தியில் குடியேறினார். அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். ஒரு சிறிய கடையின் பின்புறத்தில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பிப்பது உட்பட அவர்களின் தேவைகளை அவள் நிறைவேற்றினாள்.

தான் நேரடியாக பாதிக்கப்படாதபோதும், பிறர் நலனுக்காக துணிவது எஸ்தரும் செய்த காரியம். அவர் பெர்சியாவின் ராணி (எஸ்தர் 2:17) மேலும் பாரசீகம் முழுவதும் நாடுகடத்தப்பட்டிருந்த அவளுடைய இஸ்ரவேலர்களை காட்டிலும் பல சலுகைகளை பெற்றிருந்தார். இருப்பினும், எஸ்தர் பெர்சியாவில் உள்ள இஸ்ரவேலர்களின் நிலையை கருத்தில் கொண்டார் மற்றும் அவர்களுக்காக தனது உயிரைப் பணயம் வைத்தார், “சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்” (4:16) என்றாள். அவள் மௌனமாக இருந்திருக்கலாம், ஏனென்றால் அவள் யூதர் என்று அவளுடைய ராஜாவாகிய அவளுடைய கணவனுக்குத் தெரியாது (2:10). ஆனால், உதவிக்காக தன் உறவினர்களின் வேண்டுகோளை புறக்கணியாமல், யூதர்களை அழிக்கும் தீய சதியை அம்பலப்படுத்த தைரியமாக  பணியாற்றினாள்.

மேரி மெக்டோவல் அல்லது ராணி எஸ்தர் போல அசாத்தியமான காரியங்களுக்காக நம்மால் நிற்க முடியாமல் போகலாம், ஆனால் பிறரின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு உதவ தேவன் நமக்கு வழங்கியதை பயன்படுத்துங்கள்.