தனக்கு இறுதிநிலை புற்றுநோய் இருப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய ஒரு நாவலை சமீபத்தில் படித்தேன். நிக்கோலாவின் கோபமடைந்த நண்பர்கள் அவளை யதார்த்தத்தை எதிர்கொள்ளும்படி வற்புறுத்தும்போது, அவளுடைய மறுப்புக்கான காரணம் வெளிப்படுகிறது. “நான் என் வாழ்க்கையை வீணடித்துவிட்டேன்,” என அவர்களிடம் சொல்கிறாள். திறமையோடும் செல்வத்தோடும் பிறந்தாலும், “நான் என் வாழ்க்கையில் எதையும் செய்யவில்லை. நான் மெத்தனமாக இருந்தேன். நான் எதிலும் ஈடுபாடுகாட்டவில்லை” என்றவள், இப்போது உலகை விட்டு வெளியேறும் நிலை, அவள் அற்பமாக சாதித்துவிட்டதாக உணர்கிறாள், சிந்தித்து பார்க்கவே நிக்கோலாவுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
நான் அதே நேரத்தில் பிரசங்கியை படித்துக் கொண்டிருந்தேன், அதில் இதற்கு மாறுபாடு அப்பட்டமாக இருந்தது. “நீ போகிற பாதாளத்திலே” (9:10) என்ற கல்லறையின் யதார்த்தத்தைத் புறக்கணிக்கும்படி அதன் ஆசிரியர் நம்மை அறிவுறுத்தவில்லை. இதை எதிர்கொள்வது கடினமாக இருந்தாலும் (வ.2), நாம் இப்போது இருக்கும் ஒவ்வொரு கணத்திற்கும் மதிப்பளிக்க இது நம்மை வழிநடத்தும் (வ.4), இஷ்டப்பட்டு நம் உணவிலும், குடும்பத்திலும் மகிழ்வது (வ.7–9), விருப்பத்தோடு வேலை செய்வது (வ.10), சாகசங்கள் மற்றும் ஆபத்துகளை எதிர்கொள்வது (11:1,6), மற்றும் அனைத்தையும் செய்தாலும் தேவனுக்கு முன்பாக நாம் ஒருநாள் பதிலளிப்போம் (வ.9;12:13-14).
நிக்கோலாவின் நண்பர்கள், அவளது உண்மைத்தன்மையும், தாராள மனப்பான்மையும் அவளுடைய வாழ்க்கை வீணாகவில்லை என்பதை நிரூபிப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், “உன் சிருஷ்டிகரை நினை” (12:1) அவர் வழிகளில் நட, இன்று அவரளித்திடும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்து நேசித்து வாழுங்கள் என்ற பிரசங்கியின் அறிவுரையே நம் வாழ்நாளின் முடிவில் இத்தகைய நெருக்கடியிலிருந்து நம் அனைவரையும் காப்பாற்றும்.
இன்றைய எளிய ஆனால் தெய்வீக சந்தோஷங்களில் நீங்கள் எவ்வாறு மகிழ்ச்சி அடைவீர்கள்? நீங்கள் செய்ய வேண்டிய அல்லது முயற்சிக்க வேண்டிய ஒரு நல்ல காரியம் என்ன?
அன்புள்ள தேவனே, இன்றைய நாளுக்காகவும் அது தன்னகத்தே வைத்திருக்கும் ஈவுகளுக்காகவும் நன்றி. நான் அதன் எளிய மகிழ்ச்சிகளை அனுபவிப்பேன் மற்றும் உமக்கான ஆராதனையாக அதன் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வேன்.