மார்ச் 1945 இல், “கோஸ்ட் ஆர்மி” படைப்பிரிவு அமெரிக்கப் படைகள் ரைன் நதியைக் கடக்க உதவியது. இது இரண்டாம் உலகப் போரில் மேற்கு முனையிலிருந்து செயல்படுவதற்கு கூட்டுப்படைகளுக்கு ஒரு முக்கிய தளத்தை அளித்தது. அனைத்து 23 வது தலைமையக சிறப்பு துருப்புக்களின் வீரர்கள் சாதாரணமான மனிதர்கலேயன்றி, தோற்றங்கள் அல்ல. இந்தச் சந்தர்ப்பத்தில் நிகழ்ந்தது; 1,100 பேர் கொண்ட குழு, ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தி ஒலிவதிர்வுகளை உண்டாக்கி 30,000 வீரர்கள், துருப்பு டாங்கிகள், குண்டுவீச்சு படையினர் மற்றும் பலர் உள்ளதை போல தோற்றத்தை ஏற்படுத்தியது. ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையிலான கோஸ்ட் ஆர்மி உறுப்பினர்கள் மிகப் பெரிய படையாக தங்களை எதிரிகள் கருதி பயப்பட வழிவகுத்தனர்.

மீதியானியர்களும், அவர்கள் கூட்டுப்படையினரும் இரவில் பெரிதாய் தோன்றின ஒரு மிகச்சிறிய படைக்குமுன் நடுங்கினர் (நியாயாதிபதிகள் 7:8–22). நியாயாதிபதி, தீர்க்கதரிசி மற்றும் இஸ்ரேலின் இராணுவத் தலைவரான கிதியோன் தனது அற்பமான படையை கொண்டு எதிரியை நடுங்கச்செய்ய தேவனால் பயன்படுத்தப்பட்டார். அவர்கள் செயற்கை ஒலி (ஊதப்பட்ட எக்காளங்கள், அடித்து நொறுக்கப்பட்ட களிமண் பானைகள், மனித குரல்கள்) மற்றும் கண்ணுக்குத் தெரியும் பொருள்கள் (எரியும் தீவட்டிகள்) ஆகியவற்றைப் பயன்படுத்தி, “வெட்டுக் கிளிகளைப் போலத் திரளாய்” பரந்திருந்த எதிரிகளை (வி. 12) தங்களைக்காட்டிலும் ஒரு பெரிய எதிரியை எதிர்கொண்டதாக நம்பச்செய்தார்கள். தேவனின் கட்டளையால் 32,000 வீரர்களாயிருந்தவர்கள், வெறும் 300 பேர் கொண்ட படையாக குறைக்கப்பட்டு (வ. 2–8) அந்த இரவில் எதிரிகளை தோற்கடித்தனர். ஏன்? ஏனென்றால், போரில் வென்றது யார் என்பது தெளிவாகிறது. தேவன் கிதியோனிடம் சொன்னது போல, “அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்” (வ.9).

நாம் பலவீனமாகவும் குறைவாகவும் உணரும்போது, ​​தேவனைத் தேடுவோம், அவருடைய பலத்தில் மட்டுமே இளைப்பாறுவோம். ஏனெனில், நம் “பலவீனத்திலே என் (அவர்) பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9).