மேற்கு அமெரிக்காவிலுள்ள உள்ள எனது மாநிலத்தில் பனிப்புயல் வீசியதால், என் விதவை தாயார் புயலிலிருந்து சற்று தப்பிக்கொள்ள, என் குடும்பத்துடன் இருக்க ஒப்புக்கொண்டார். எனினும், பனிப்புயலுக்குப் பிறகு, அவர் வீட்டிற்குத் திரும்பவில்லை. அவருடைய வாழ்நாள் முழுவதும் எங்களுடன் வசிக்க, எங்களுடன் குடியேறினாள். அவரது வருகை எங்கள் குடும்பத்தை பல நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தது. குடும்பத்தினர்களுக்கான ஞானமுள்ள ஆலோசனை, அறிவுரை மற்றும் முன்னோர்களின் கதைகள் போன்றவற்றை அவர் தினசரி பகிர்ந்துகொளண்டார். அவரும் என் கணவரும் ஒரே மாதிரியான நகைச்சுவை உணர்வையும் விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தையும் பகிர்ந்துகொண்டு சிறந்த நண்பர்களானார்கள். இனி ஒரு விருந்தினராக இல்லை, அவர் நிரந்தரமான மற்றும் முக்கிய குடும்பத்தினராக இருந்தார். தேவன் அவரை நித்திய வீட்டிற்கு அழைத்த பிறகும் அவா் கொண்டுவந்த மாற்றங்கள் எங்கள் இதயங்களில் இருக்கும்.

இந்த அனுபவம், இயேசுவைப் பற்றி யோவான், “நமக்குள்ளே வாசம்பண்ணினார்” (யோவான் 1:14) என்று வர்ணிப்பதை நினைவூட்டுகிறது. இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய விளக்கமாகும், ஏனெனில் அசல் கிரேக்கத்தில் வாசம் பண்ணினார் என்ற வார்த்தை “ஒரு கூடாரம் அமைத்தல்” என்று பொருள்படும். மற்றொரு மொழிபெயர்ப்பு கூறுகிறது, அவர் “நம்மிடையே தமது வசிப்பிடத்தை ஏற்படுத்தினார்” என்று.

விசுவாசத்தினால் நாமும் இயேசுவை நம்மோடு வசிப்பவராக நம் இதயத்தில் ஏற்கிறோம். பவுல் எழுதியுள்ளாா், “நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி” (எபேசியர் 3:16–17).

ஒரு சாதாரண விருந்தினராக அல்ல, இயேசு அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் அதிகாரமளிக்கும் நிரந்தர குடியிருப்பாளர். நாம் நம் இதயத்தின் கதவுகளை அகலத் திறந்து அவரை வரவேற்போம்.