1929 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தை வீழ்த்தியது போன்ற எதிர்கால நிதித் தவறுகளைத் தவிர்க்க உதவும் வகையில், ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் தவறுகளின் நூலகம் என்று ஒன்று (டுiடிசயசல ழக ஆளைவயமநள) நிறுவப்பட்டது. அடுத்த தலைமுறை பொருளாதார வல்லுனர்களுக்கு கல்வி கற்பதற்கு உதவும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களின் தொகுப்பை இது உள்ளடக்கியுள்ளது. நூலகத்தின் கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, “புத்திசாலி மக்களும் முட்டாள்தனமான செயல்களைச் செய்கிறார்கள்” என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒரே வழி, தங்களுடைய முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதுதான் என்று அந்த கண்காணிப்பாளர்கள் நம்புகிறார்கள்.
சோதனையை மேற்கொள்வதற்கும், நிலையான ஆவிக்குரிய ஜீவியத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், தேவ ஜனங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதே சிறந்த வழி என்று பவுல் கொரிந்தியர்களுக்கு அறிவுறுத்துகிறார். அவ்வாறு செய்வதின் மூலம் அவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தை மேன்மைப் பாராட்டாமல், இஸ்ரவேலர்களின் தோல்விகளிலிருந்து ஞானத்தைக் கற்றுக்கொள்ள அவர்களை மாதிரிகளாய் பயன்படுத்துகிறார். இஸ்ரவேலர்கள் விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு, விபச்சாரம் செய்து, தேவனுடைய சித்தத்திற்கும் நோக்கத்திற்கும் விரோதமாக முறுமுறுத்து, தேவன் ஏற்படுத்திய தலைமைத்துவத்திற்கு விரோதமாக கலகம்பண்ணினார்கள். அவர்களுடைய பாவத்தின் காரணமாக, அவர்கள் அவருடைய சிட்சையை அனுபவிக்க நேர்ந்தது (1 கொரிந்தியர் 10:7-10). இஸ்ரவேலின் தவறுகளை மீண்டும் செய்வதைத் கிறிஸ்தவர்கள் தவிர்க்கும்பொருட்டு, பவுல் இந்த வரலாற்று “உதாரணங்களை” வேதத்திலிருந்து முன்வைக்கிறார் (வச. 11).
தேவனுடைய உதவியோடு, கீழ்ப்படிதலை வெளிப்படுத்தும் பொருட்டு, நம்முடைய தவறுகளிலிருந்தும், மற்றவர்களுடைய தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம்.
பாவம் செய்ய தூண்டப்படும்போது என்ன எச்சரிக்கையை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்? நம்முடைய மற்றும் மற்றவர்களின் தவறுகளிலிருந்து நாம் எவ்வாறு பாடம் கற்றுக்கொள்ளலாம்?
அன்புள்ள தேவனே, உமக்கு இன்னும் என்னுடைய கீழ்ப்படிதலை அதிகமாய் வெளிப்படுத்த, தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ள எனக்கு உதவிசெய்யும்.