போதகர் தாமஸ் சால்மர்ஸ் 19ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். இவர் மலைச்சரிவில் குறுகலான பாதையில் குதிரை வண்டியில் சவாரி செய்த தனது அனுபவத்தை கூறினார். பயணத்தின் போது ஒரு குதிரை சற்று பயந்தது, எனவே குதிரை ஓட்டி வண்டியோடு கீழே விழுந்து மரித்துப் போவோமோ என்று எண்ணியவராக சாட்டையைக் கொண்டு சடக் சடக் என குதிரையை அடித்தார். அந்த ஆபத்தான பாதையை அவர்கள் கடந்த பொழுது, வண்டி ஓட்டுனரிடம் ஏன் குதிரையை அடித்தீர் என்று போதகர் கேட்டார். அதற்கு வண்டி ஓட்டினர் அந்த ஆபத்தான நேரத்தை குறித்து சிந்திக்க செய்யாமல் அதன் சிந்தனையை நான் திருப்ப வேண்டியதாய் இருந்தது எனவே அவ்வாறு செய்தேன் என்றான்.
நம்மைச் சுற்றியும் ஆபத்துகளும் பயமுறுத்துதல்களும் இருப்பதால், நம் சிந்தனை சிதறாமல் கவனம் செலுத்த நாம் அழைக்கப்படுகிறோம். இப்படிப்பட்ட நேரத்தில், நம் சிந்தனை திசை திருப்பப்படாமல் இருக்க மனதளவில் ஓர் உறுதியான நோக்கம் தேவை. யூதாவில் உள்ள கர்த்தருடைய ஜனங்களிடத்தில் ஏசாயா கூறுயது போல, நமது பார்வை தேவனையே நோக்கி நிலைத்திருக்க வேண்டும். இங்கே ஏசாயா கொடுக்கும் வாக்குறுதி, உம்மை உறுதியாய் பற்றிக் கொண்ட மனதை உடையவன் உண்மையே நம்பி இருக்கிறபடியால் நீர் அவனை பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர் என்பதுதான். நான்காம் வசனத்தில் சொல்லப்பட்டிருப்பது போல நாம் கர்த்தரை பூரணமாக நம்பலாம் ஏனென்றால் கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாய் இருக்கிறார்.
பூரண சமாதானம் என்பது தேவன் மீது நிலைத்திருக்கும் பார்வை கொள்ளும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வெகுமதி. அவர் தரும் சமாதானம், நாம் எதிர்கொள்ளும் பயங்கரமான எண்ணங்களை காட்டிலும் மேலானது. யார் யார் தங்களுடைய எதிர்காலத்தையும், நம்பிக்கையையும், கவலைகளையும் அவருடைய கரங்களில் ஒப்படைக்கிறார்களோ, பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு புதிய ஒரு வாழ்க்கை முறையை வாய்க்கப் பண்ணுகிறார்.
பொதுவாக உங்கள் கவனத்தை எதன் மீது வைப்பீர்கள்? கடவுள் மீது நிலைத்திருக்கும் பார்வையை எப்படி புதுப்பிப்பீர்கள்?
அன்புள்ள தேவனே, என் மனதில் தோன்றும் எண்ணங்களினால் பயந்து வாழ்கிறேன். தயவு கூர்ந்து உம்முடைய சமாதானத்தை எனக்கு தாரும்.