Archives: அக்டோபர் 2023

நொருங்குண்டவர்களின் நம்பிக்கை

“மற்றவர்களால் பார்க்கமுடியாத வகையில் பெரும்பாலானோர் தழும்புகளை உடையவர்களாயிருப்பர்.” இந்த ஆழமான வார்த்தைகள் மேஜர் லீக் பேஸ்பால் வீரர் ஆண்ட்ரெல்டன் சிம்மன்ஸிடமிருந்து வந்தது. அவர் மனநலப் போராட்டங்கள் காரணமாக 2020 சீசன் விளையாட்டின் இறுதியாட்டத்திலிருந்து விலகினார். சிம்மன்ஸ் தனது முடிவைப் பிரதிபலிக்கும் வகையில், இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் மற்றவர்களை ஊக்குவிக்கவும், இரக்கம் காட்ட மற்றவர்களுக்கு நினைவூட்டவும் தனது கதையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

கண்ணிற்கு புலப்படாத தழும்புகள் என்பது வெளிப்படையாய் தெரியாவிட்டாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சங்கீதம் 6 இல், தாவீது தனது சொந்த ஆழமான போராட்டத்தைப் பற்றி வேதனையான மற்றும் நேர்மையான வார்த்தைகளை எழுதுகிறார். அவர் பெலனற்றுப்போய் (வச. 2) மிகுந்த வியாகுலத்தில் (வச. 3) இருந்தார். அவர் பெருமூச்சினால் இளைத்து, கண்ணீரினால் படுக்கையை நனைத்தார் (வச. 6). தாவீது தனது வியாகுலத்திற்கான காரணத்தை பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், நம்மில் பலர் அவருடைய வேதனையை உணரக்கூடும். 

தாவீது தன்னுடைய வேதனையை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை நாம் அறிந்து ஊக்கம்பெறக்கூடும். அவருடைய அதிகமான வியாகுலத்தில் அவர் தேவனை நோக்கிக் கதறுகிறார். அவருடைய இருதயத்தை நேர்மையாக ஊற்றி, சுகத்திற்காகவும் (வச. 2), மீட்பிற்காகவும் (வச. 4), இரக்கத்திற்காகவும் (வச. 9) விண்ணப்பிக்கிறார். “எதுவரைக்கும்?” (வச. 3) என்னும் கேள்வியை கேட்டு தன்னுடைய பாடுகளின் வீரியத்தை தாவீது வெளிப்படுத்தினாலும், “கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்” (வச. 8) என்றும் நிச்சயமாய் தன்னுடைய “பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்” (வச. 10) என்றும் உறுதியுடன் இருக்கிறார்.

நம்முடைய தேவன் யார் என்று அறிவதில் நம்முடைய நம்பிக்கை உதயமாகிறது.

இயேசுவை போலொரு தேவன்

வாசிக்க: கொலோசெயர் 2:6-9

ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது. (வ. 9)

பல ஆண்டுகளாக எனக்கு ஸ்காட்லாந்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. ஒருவேளை நான் பார்த்த ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் பேரிலோ அல்லது அதில் காட்டப்பட்ட அந்நாட்டின் உயர்மலைகளின் பேரிலோ அந்த தாக்கம் உண்டாகியிருக்கலாம். அல்லது எங்கள் குடும்ப சரித்திரத்தை ஆராய்கையில் அதில் இருந்த ஸ்காட்டிஷ் குலத்தைப் பற்றி என் அப்பா ஒருமுறை பேசியதால் கூட இருக்கலாம். நான் அந்த இடத்தைப் பற்றி அடிக்கடி யோசித்து, மக்களைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும்…

பிரசித்திப்படுத்துவதும் பிரதிபலிப்பதும்

வாசிக்க: தீத்து 2:11-15

அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் (வ. 14).

ஆண்டி சியர்லஸ், ஒரு போதகர் மற்றும் பகுதிநேர விளையாட்டுப் பயிற்சியாளர். சமீபத்தில் ஒரு நண்பர்கள் குழுவிற்கும், எனக்கும் சிந்தனைக்கு ஏற்ற ஞானமான ஆலோசனையை கொடுத்தார். அவர் "நமது உரையாடல்களில் நாம் எப்போதும் எதையாவது ஊக்குவிக்கிறோம் அல்லது பிரதிபலிக்கிறோம். ஒருவேளை அவை நமது மதிப்பீடுகள், நமது கடந்த காலம், நமது நம்பிக்கைகள் அல்லது நம்மையே கூட இருக்கலாம்.…

குழந்தைப் போல விசுவாசித்தல்

வாசிக்க: லூக்கா 10:1-23

இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. (வ. 21)

ஒவ்வொரு ஞாயிறு காலையும் அந்த தாழ்வாரத்தில் நாங்கள் சந்தித்துக்கொள்வோம். அவள் கண்கள் மகிழ்ச்சியால் நிரம்பி, மிளிரும். உடனே அவள் என் பெயரை, "மார்லினா!" என்று ராகத்தோடு அழைப்பாள். அவள் என்னை மயக்குகிறாள், அவளை கட்டிப்பிடித்து, "உன்னை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றால், அவள் எப்பொழுதும்,…

இயேசுவைப்போல கோபம்கொள்ளுதல்

வாசிக்க: எபேசியர் 4:17–5:2

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள் (4:26).

உங்களுக்கு எதனால் கோபம்? போக்குவரத்து நெரிசல்; வீங்கின கால்; அற்பமாக புறக்கணிக்கப்படுதல்; உங்களை சந்திப்பதாக சொன்னவர் வரவில்லையா? அல்லது இரவு முழுவதும் நீளக்கூடிய திடீர் வேலையா? கோபம் என்பது உணர்ச்சிபூர்வமான விரக்தி. நாம் தடைபடும்போதும், ​​யாராகிலும் அல்லது ஏதாகிலும் நம் வழியில் குறுக்கிடும்போதும் இது அடிக்கடி எழுகிறது.

கோபம் என்பது எல்லா மனிதர்களும் அனுபவித்திட தேவன் தந்த உணர்வு. எனது உரிமைகள் மீறப்படும்போது நான் அதை விரைவாக அனுபவிக்க கூடும். போக்குவரத்தில் ஒரு வாகனம் தவறாக என்னை…

இயேசுவை போல் வாழுதல்

வாசிக்க: மத்தேயு 7:1-6, 15-23

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (வ. 21).

பல ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று ஒரு தேவாலயத்தில் சேர்ந்த சட்டமன்ற உதவியாளரை எனக்குத் தெரியும். அது அவருக்குப் பொருத்தமற்றதாகத் தோன்றியதால், அதைப் பற்றி அவரிடம் கேட்டேன். "நான் அலுவலகத்திற்கு ஓடிப்போவதை பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன்," என்று அவர் ஒப்புக்கொண்டார், "இது நன்றாக இருப்பதாக என் முதலாளி என்னிடம் கூறினார்" என்றும் சொன்னார்.

இந்த கதையை மற்றொருவருடன் ஒப்பிடவும்,…

இயேசுவை போல பார்த்தல்

வாசிக்க: எபிரேயர் 12:1-29

விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் (வ. 1).

தனது 100 ஆண்டுகால வாழ்க்கையில், புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ஸ்டான்லி ட்ரூட்மேன் சில ஆழமான நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தார். 1945 ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க கடற்படை புகைப்படக் கலைஞராக, ட்ரூட்மேன் ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் இரண்டாம் உலகப் போரின் நெஞ்சை பதைக்கும் சில படங்களைப் படம்பிடித்தார். போருக்குப் பிறகு, ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ விளையாட்டு புகைப்படக் கலைஞராக,…

இயேசுவை போல காணப்படுதல்

வாசிக்க: பிலிப்பியர் 2:1-13

அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (வ. 12-13)

நானும் எனது குடும்பமும் ஒரு புதிய நகரத்திற்கு குடிபெயர்ந்தபோது, ​​எங்களின் புதிய தேவாலயத்தில் சீடத்துவ குழுவின் இயக்குனராக நான் பணியமர்த்தப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமைகளும் புதன் கிழமைகளும் ஆலயம் நிரம்பி இருப்பதால், இந்நாட்களில் நான் விரைவாக இரவு உணவை சமைக்க வேண்டும் அல்லது என் கணவர் மற்றும் இளம் மகள்களைத் தங்களைத் தாங்களே பராமரிக்கும்படி விட்டுவிட வேண்டும்.…

இயேசுவை போலொரு தேவன்

Read: கொலோசெயர் 2:6-9

ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.(வ.9)

பல ஆண்டுகளாக எனக்கு ஸ்காட்லாந்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. ஒருவேளை நான் பார்த்த ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் பேரிலோ அல்லது அதில் காட்டப்பட்ட அந்நாட்டின் உயர்மலைகளின் பேரிலோ அந்த தாக்கம் உண்டாகியிருக்கலாம். அல்லது எங்கள் குடும்ப சரித்திரத்தை ஆராய்கையில் அதில் இருந்த ஸ்காட்டிஷ் குலத்தைப் பற்றி என் அப்பா ஒருமுறை பேசியதால் கூட இருக்கலாம். நான் அந்த இடத்தைப் பற்றி அடிக்கடி யோசித்து, மக்களைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் எண்ணற்ற…