அந்நியர்களை உபசரித்தல்
ஆயிரக்கணக்கான உக்ரேனிய பெண்களும் குழந்தைகளும் போரிலிருந்து தப்பி பெர்லினின் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, அவர்கள் ஒரு ஆச்சரியத்தை எதிர்கொண்டனர். ஜெர்மன் குடும்பங்கள் அகதிகளுக்கு ஆதரவளிப்பதாக தங்கள் கைகளினால் எழுதப்பட்ட வாசகங்களை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். “இரண்டு பேரை உபசரிக்க முடியம்” என்று ஒரு அடையாளம் வாசிக்கப்பட்டது. “பெரிய அறை இருக்கிறது” என்று இன்னொரு வாசகம் தென்பட்டது. அந்நியர்களுக்கு ஏன் இத்தகைய உபசரிப்பு வழங்குகிறீர்கள் என்று ஒரு பெண்ணை கேட்டதற்கு, அவள், நாசிசவாதிகளிடமிருந்து தப்பிச்செல்லும் போது தனது தாய்க்கு அடைக்கலம் தேவைப்பட்டதாகவும், அத்தகைய தேவையில் இருக்கும் மற்றவர்களுக்கு தான் உதவ விரும்புவதாகவும் அவள் கூறினாள்.
உபாகமத்தில், தேவன் வெகுதொலைவிலிருந்து வரும் அயலகத்தார்களை உபசரிக்கும்படிக்கு இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஏன்? ஏனென்றால் “அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்” (10:18). மேலும் அவர்களைப் பார்த்து, “எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக” (வச. 19) என்றும் அறிவுறுத்துகிறார். அவர்களை பட்சாதாபத்துடன் பராமரிக்கும்படிக்கு தூண்கிறார்.
ஆனால் அதற்கு மறுபக்கமும் இருக்கிறது. ஆபிரகாம் தன்னுடைய வீட்டிற்கு வந்த விருந்தினர்களை உபசரித்து ஆசீர்வதிக்கப்பட்டதுபோல (ஆதியாகமம் 18:1-5), சாரிபாத் விதவை எலியாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து உபசரித்து ஆசீர்வதிக்கப்பட்டாள் (1 இராஜாக்கள் 17:9-24). தேவன் விருந்தினர்களை ஆசீர்வதிப்பதற்காக அல்லாமல், அவர்களை உபசரிக்கிறவர்களை ஆசீர்வதிப்பதையே அதிகம் விரும்புகிறார்.
ஒரு புதிய நபரை உங்கள் வீட்டில் வைத்து உபசரிப்பது என்பது கடினமானது. ஆனால், அந்த ஜெர்மானிய குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாமும் பெலவீனமானவர்கள் மீது அக்கறைகொள்ளும்போது, அவர்கள் மூலமாய் தேவன் நமக்கு அருளும் ஆசீர்வாதங்களுக்கு பாத்திரராக முடியும்.
உறுதியாய் தரித்திரு
நான் அறைக்குள் நுழைந்த பிறகு, என் உடல் தண்ணீருக்கு மேல் வசதியாக மிதந்தது, அறை இருட்டானது மற்றும் பின்னணியில் ஒலித்த மென்மையான இசை அமைதியாகிவிட்டது. தனிமைப்படுத்தப்பட்ட அந்த தண்ணீர்த்தொட்டிகள், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்ககூடியது என்று நான் படித்திருக்கிறேன். ஆனால் இந்த அனுபவம் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. உலகின் குழப்பம் நின்றுவிட்டதைப் போல உணர்ந்தேன், என் உள் உணர்வுகளை என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது. நான் என்னை சமநிலைப்படுத்தி, புத்துணர்ச்சி பெற்ற நிலையில் என்னை கிடத்தினேன். மௌனமான அமைதி நிலையில் வல்லமை இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்குத் தேவையான ஞானத்தை பெற்றுக்கொண்டு, நமது வல்லமையைப் புதுப்பித்து, தேவனுடைய பிரசன்னத்தின் அமைதியில் நாம் மிகவும் வசதியாக இளைப்பாறக்கூடும். நாம் மௌனமாய் காத்திருக்கும்வேளையில், நம் வாழ்வில் உள்ள கவனச்சிதறல்களை நீக்கி, அவர் நம்மைப் பலப்படுத்துகிறார். அதினால் அவருடைய மெல்லிய சத்தத்தை நாம் இன்னும் தெளிவாகக் கேட்க முடியும் (சங்கீதம் 37:7).
இதுபோன்று நம்முடைய புலன்களை ஆசுவாசப்படுத்தும் அறைகள் நிச்சயமாக அமைதியின் ஒரு வடிவமாக இருந்தாலும், தேவனோடு இடைவிடாமல் நேரம் செலவழிக்க தேவன் நமக்கு ஒரு எளிமையான வழியைக் கற்றுக்கொடுக்கிறார். “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு” (மத்தேயு 6:6) என்று சொல்லுகிறார். நாம் அவருடைய மகத்தான பிரசன்னத்தின் அமைதியில் வாழ்க்கையின் சவால்களுக்கான பதில்களைத் தேடும்போது, அவர் நம் நடைகளை ஸ்திரப்படுத்தி, அவருடைய நீதி நம் மூலம் பிரகாசமாக ஓளிரச்செய்வார் (சங்கீதம் 37:5-6).
தேவனோடு போராடுதல்
வாசிக்க: ஆதி. 28:10-22, 35:9-14
"அவனை ஆசீர்வதித்து: இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்" (35:9-10).
"பயம் என்பது கிறிஸ்தவ மனப்பான்மை அல்ல" என்று நாவலாசிரியர் மார்லின் ராபின்சன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் பயம் என்பது மனித நடத்தையில் மிகவும் ஆற்றல்வாய்ந்த மற்றும் நிலையான தாக்கங்களில் ஒன்றாகும். வெளிப்புறமான கீழ்ப்படிதல்கூட அன்பை காட்டிலும் பயத்தால்தான் செயல்படுகிறது. பயத்தால் தூண்டப்படாமல் வாழ்வது என்றால் என்ன? என்று கூட…
உறுதியான நம்பிக்கை
வாசிக்க: எபிரேயர் 10:32-39
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் (வ. 38)
இழப்பு, கடினமான சூழல், அலைச்சல் மற்றும் சுகவீனம் என்று ஒரு நீண்ட பருவத்தை தொடர்ந்து உள்ளமும் இதயமும் நொறுங்கியிருந்தது. இயேசு கிறிஸ்து தான் "மகா தேவனும் நமது இரட்சகரு(ம்)" (தீத்து 2:13) என்ற உறுதிப்பாடு என்னில் சிதயவில்லை என்றாலும், நமது அனுதின வாழ்வின் காரியங்களில் அவரை முழுவதும் நம்புவதை குறித்து எனக்கு அநேக கேள்விகள் எழும்பின.
இந்த நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், சபை மூப்பர்கள் எனக்காக ஜெபித்தபோது குறிப்பிடத்தக்க பலத்தையும் ஊக்கத்தையும் பெற்றேன். "தைரியத்தை விட்டுவிடாதிரு(க்க)"…
பயமூட்டும் கிருபை
வாசிக்க: 2 சாமுவேல் 6:1-23
தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி... (வ. 9).
ஆச்சரியமூட்டும் கிருபை என்ற பாடலில் வரும் இந்த வரிகளை என்றாவது சிந்தித்து பார்த்தீர்களா? "இக்கிருபை என் பயம் நீக்கிற்று, பயப்படவும் கற்று கொடுத்தது. நான் விசுவாசித்த முதல் தருணமுதல் எவ்விலையேறப்பெற்ற கிருபையிது". உள்ளம் பயப்பட கிருபை கற்றுக்கொடுத்ததாம். பயப்படும் அளவிற்கு கிருபை பயங்கரமானதா?
தேவனின் உடன்படிக்கை பெட்டியை தாவீது மீண்டும் எருசலேமிற்கு கொண்டுவருகையில், இக்கேள்விகளுக்கான விடைகளை கண்டுகொண்டார். அது ஒரு பண்டிகை, இரைச்சலான கொண்டாட்டம், மனிதனின்…
யோபுவின் முரண்பாடு
வாசிக்க: யோபு 38:1-18
அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? (வ. 1-2)
ஞானி ஒருவர் ஒருமுறை, "மனப்போராட்டம் என்பது மேலோட்டமானது அல்ல, அடிவேரில் தான் அது அதிகமிருக்கும்" என்றார். யோபுவும் கூட இதனை ஆமோதிப்பதற்கு வாய்ப்பு அதிகமுண்டு. மனமடிவுண்டாக்கும் அழிவின் செய்திகளை பகுதிப்பகுதியாக கேட்டு அனுபவிக்கும் சூழலுக்கு அவர் தீடிரென்றும் கட்டாயமாகவும் தள்ளப்பட்டார். அவருடைய மிருகஜீவன்கள், வயல்வெளிகள், வேலையாட்கள் மற்றும் குழந்தைகள் என்று அனைத்தும் ஒரே நாளில் அழிந்தது.
இந்த கொந்தளிப்புக்கு மத்தியில், அவரது மனைவி தேவனை நிந்தித்து…
ஆனாலும் தேவன்
வாசிக்க: 1 சாமுவேல் 23:7-14
சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. (வ. 14)
விரக்தியில் இருந்த ஒருவர், ஒரு வேதாகம ஆசிரியரிடம், “என் வாழ்க்கை உண்மையில் மோசமான நிலையில் உள்ளது” என்று ஒப்புக்கொண்டார். "எவ்வளவு மோசம்?" என்று கேட்டார் ஆசிரியர். கைகளில் தலையைப் புதைத்துக்கொண்டு, அந்த நபர் "எவ்வளவு மோசமானது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு தேவனை தவிர வேறு எதுவும் இல்லை” என்று புலம்பினார்.
வாழ்க்கை தனக்கு ஒரு மோசமான நிலைமையை கொடுத்ததாக அந்த நபர் நினைத்தார். வேதாகமத்தில்,…