“நான் ஒன்றுமில்லை! நீ யார்?” என்று தொடங்கும் எமிலி டிக்கின்சனின் ஒரு கவிதையில், அடையாளம் இல்லாமல் இருப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை விடுத்து, யாரோ ஒருவராய் தாங்கள் இருக்கவிரும்பும் மக்களின் சிந்தையை அவர் சவால்விடுகிறார். “யாரோ ஒருவராய் இருப்பதற்கு ஏன் மந்தமாக உணரவேண்டும்! – தவளைபோல் யாரோ ஒருவராய் வாழ்வதற்கு ஏன் யோசிக்கிறோம்.”
யாரோ ஒருவராய் வாழ்வதற்கான தேவையை விட்டுவிடுவதில் ஏற்படும் சுதந்திரத்தை அனுபவிப்பது என்பது பவுல் அப்போஸ்தலரின் சாட்சியை நினைவுபடுத்துகிறது. பவுல் இயேசுவை சந்திக்கும் முன்பு, வெளியரங்கமாய் மக்களை ஈர்க்கும் மத அங்கீகாரங்களையும் மாம்சத்தின் மீது நம்பிக்கை வைப்பதற்கான நியாயமான காரணங்களையும் பவுல் கொண்டிருந்தார் (பிலிப்பியர் 3:4).
ஆனால் இயேசுவை சந்தித்த பின்பு அனைத்தும் மாறியது. கிறிஸ்துவின் தியாகமான அன்பின் ஊடாய் தன்னுடைய மார்க்க ரீதியான சாதனைகளை பார்க்க பழகிய பவுல், “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், … கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்… (வச. 8) என்று அறிக்கையிடுகிறார். “நான் அவரை… அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்” (வச. 10) வாழ்வதே தன்னுடைய வாழ்க்கையின் முதன்மைக் குறிக்கோள் என்று சொல்லுகிறார்.
யாரோ ஒருவராய் நாம் மாற முயற்சிப்பது மந்தமான வாழ்க்கை. ஆனால் கிறிஸ்துவின் தியாகமான அன்பின் நிழலில் நம்முடைய சுயத்தை இழப்பது என்பது, ஜீவியத்தை புதுப்பிக்கும் புதுவாழ்வை நமக்கு அறிமுகப்படுத்துகிறது (வச. 9).
சாதனை செய்து சுய மதிப்பை தேடுவதிலிருந்தோ அல்லது மற்றவர்களிடமிருந்தோ நீங்கள் எப்போது சுதந்திரத்தை அனுபவித்தீர்கள்? “கிறிஸ்துவில்” உங்களைக் கண்டறிவது பெருமை மற்றும் சுய நிராகரிப்பு ஆகிய இரண்டிலிருந்தும் உங்களை எப்படி விடுவிக்கும்?
அன்பான தேவனே, உம்மால் நான் நேசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நான் வேறொருவராகவோ இருக்கவேண்டியதில்லை என்பதற்காய் உமக்கு நன்றி.