“அதை மறைக்க கூடாது” என வின்ஸ்டனுக்குத் தெரியும். எனவே அவன் ஒரு தந்திரமான யுக்தியைக் கையாண்டான். “தந்திரமாக மறைப்பது” என்று அதைப் பற்றிக் கூறுவோம். வின்ஸ்டன் தூக்கி எறியப்பட்ட, கவனிக்கப்படாத காலணிகளை கண்டால், சாதாரணமாக அந்தத் திசையில் வளைந்து, அதை எடுத்துவிட்டு, யாரும் பார்க்காத நேரத்தில், மெதுவாக நடந்து செல்வான். கதவைத் தாண்டும்வரை தன்னை எவரும் பார்க்கவில்லை என்று அறிந்துகொண்டால், வின்ஸ்டன் உங்கள் காலணிகளை எடுத்துக்கொண்டு மெதுவாக செல்கிறான் என்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
சில சமயங்களில் “தேவன் நம் கடந்தகால பாவத்தை கண்டுகொள்ள மாட்டார்” என நாமும் தந்திரமாக நடக்கிறோம் என்பது தெளிவான ஒன்று. அவர் கவனிக்கமாட்டார் என்ற நினைவில் நாம் வஞ்சிக்கப்படுகிறோம். இது பெரிய விஷயமில்லை, “அது” எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று நம்மை நாமே பகுத்தறிகிறோம். ஆனால், வின்ஸ்டனைப் போன்றதான இந்நடவடிக்கைகள் தேவனைப் பிரியப்படுத்தாது என்பதை நாம் நன்கு அறிவோம்.
தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளைப் போல, நம் பாவத்தின் அவமானத்தின் காரணமாக நாம் அப்பாவங்களை மறைக்க முயற்சிக்கலாம் (ஆதியாகமம் 3:10) அல்லது எதுவுமே நடக்காததுபோல் நடிக்கலாம். ஆனால் வேதாகமம் மிகவும் வித்தியாசமான ஒன்றைச் செய்ய நம்மை அழைக்கிறது: தேவனின் இரக்கத்திற்காகவும் மன்னிப்பிற்காகவும் அவரிடம் ஓட சொல்கிறது. நீதிமொழிகள் 28:13 நமக்குச் சொல்லுகிறது: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்று நம் பாவத்தை யாரும் கவனிக்கவில்லையென்று, அதை நாம் செய்யாததுபோல் தந்திரமாக நடக்க முயற்சிக்க வேண்டியதில்லை. நம் தவறுகளைப்
பற்றிய உண்மையை நம்பகமான நண்பரான தேவனிடம் சொல்லும்போது, இரகசியப் பாவச்சுமையிலிருந்தும், குற்ற உணர்ச்சியிலிருந்தும், அவமானத்திலிருந்தும் விடுதலை பெறுவோம் (1 யோவான் 1:9).
உங்கள் பாவத்தை "மறைக்க" சில சமயங்களில் நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? அதை ஒப்புக்கொள்வீர்களானால், தேவனிடம் அறிக்கையிட உங்களைத் தடுப்பது எது?
தகப்பனே, எனது பாவம் என்பது ஒரு முடிவல்ல என்பதற்காக உமக்கு நன்றி. நான் உம்முடனும், மற்றவர்களுடனும் உண்மையுடன் இருக்கும்போது, உம்மிடம் தயவையும், மன்னிப்பையும் பெற்றுக்கொள்வதற்காக உமக்கு நன்றி.