“நான் மிகவும் பயனற்றவனாக உணருகிறேன்” என ஹெரால்டு கூறினார். “விதவைகள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் சொந்த குடும்பங்களுடன் மும்முரமாக இருக்கிறார்கள், சுவரில் நிழல்களைப் பார்த்துக்கொண்டு அமைதியான மதியங்களை செலவிடுகிறார்கள்” என அவர் தனது மகளிடம் அடிக்கடி கூறுவார். “நான் வயதாகிவிட்டேன், நிறைவான வாழ்க்கையையும் வாழ்ந்து விட்டேன். இனி எனக்கு எந்த நோக்கமும் இல்லை. தேவன் என்னை எந்த நேரத்திலும் தம்மிடத்திற்கு அழைத்துச் செல்வார்” என்பார்.
இருப்பினும், ஓர் பிற்பகல் உரையாடல் ஹெரால்டின் மனதை மாற்றியது. “என் பக்கத்து வீட்டுக்காரருக்கு, அவருடைய குழந்தைகளுடன் சில பிரச்சனைகள் இருந்தது. அதனால் நான் அவருக்காக ஜெபித்தேன்” என்று ஹெரால்டு கூறினார். “பின்னர், நான் அவருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டேன்”. அப்பொழுதுதான் என் வாழ்க்கைக்கு இன்னும் ஓர் நோக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்! இயேசுவைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்கும் வரை, நான் அவர்களுக்கு இரட்சகரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றார்.
ஹெரால்டு தனது விசுவாசத்தை எப்போதும் போன்ற சாதாரண சந்திப்பில் பகிர்ந்தபோது, அவரது அயலாகத்தாரின் வாழ்கை மாறியது. 2 தீமோத்தேயு 1 ல், அப்போஸ்தலனாகிய பவுல் இன்னொருவரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு, தேவனால் பயன்படுத்தப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றி குறிப்பிடுகிறார்: பவுலின் இளம் சக ஊழியனான தீமோத்தேயுவின் வாழ்க்கையில் அவரது பாட்டி லோவிசாள் மற்றும் தாயார் ஐனிக்கேயாள் ஆகியோர் “மாயமற்ற விசுவாசத்தை” கொண்டிருந்தனர் (வ.5) எனக் காண்கிறோம். ஓர் சாதாரண குடும்பத்தில் அன்றாட நிகழ்வுகள் மூலம், இளம் தீமோத்தேயு ஓர் மாயமற்ற விசுவாசத்தைக் கற்றுக்கொண்டார். அவருடைய வளர்ச்சி, இயேசுவின் உண்மையுள்ள சீஷனாகவும், இறுதியில் எபேசு தேவாலயத்தின் தலைவனாக அவருடைய ஊழியத்தை வடிவமைத்தது.
நம்முடைய வயது, பின்னணி அல்லது சூழ்நிலை எதுவாக இருந்தாலும், இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் நமக்கும் உண்டு.
இயேசுவை விசுவாசிக்கும்படி நீங்கள் யாரை ஊக்குவிக்க கூடும்? சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வாய்ப்புகளுக்காக நீங்கள் எவ்வாறு ஜெபிக்கலாம்?
அன்புள்ள இயேசுவே, என்னைச் சுற்றிலும் உமது அன்பை அறியாதிருக்கும் மக்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்ல என் கண்களையும், இதயத்தையும் திறந்தருளும். அவர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள எனக்கு வாய்ப்பளியும்.