நான் என்ன உணர்கிறேன் என்பதை என் நண்பனின் கண்கள் வெளிப்படுத்தின – பயம்! வாலிப வயதினரான நாங்கள் இருவரும் மோசமாக பயந்துகொண்டிருந்தோம். அந்த முகாம் இயக்குனருக்கு பயந்து கொண்டிருந்தோம். அவர் எங்கள் தகப்பன்மார்களை நன்கு அறிந்தவர், எங்கள் தகப்பன்மார்கள் இதனால் பெரிதும் ஏமாற்றமடைவார்கள் என்பதை அன்புடன் எங்களுக்குச் சுட்டிக்காட்டினார். எங்கள் குற்றத்திற்கான தனிப்பட்ட பொறுப்பை நாங்கள் எண்ணிப்பார்க்கும்போது நிமிர்ந்து நடக்க கூட தகுதியற்றிருந்தோம்.

யூதாவின் மக்களுக்காக தேவன் செப்பனியாவுக்கு ஓர் செய்தியைக் கொடுத்தார், அதில் பாவத்திற்கான தனிப்பட்ட பொறுப்பைப் பற்றிய வல்லமை மிகுந்த வார்த்தைகளைக் (செப்பனியா 1:1, 6-7) காண்கிறோம். யூதாவின் பகைவர்களுக்கு எதிராக அவர் கொண்டுவரும் தீர்ப்புகளை விவரித்த பிறகு (அதிகாரம் 2), அவர் தனது பார்வையை குற்றம் செய்து குற்ற மனசாட்சியுடன் இருக்கும் தம் மக்கள் மீது திருப்பினார் (அதி. 3). ”இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ!“ (செப்பனியா 3.1). “அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள்” (செப்பனியா 3:7)

அவர் தமது மக்களின் கடின இதயங்களைக் கண்டார். அவர்களின் ஆவிக்குரிய அக்கறையின்மை, சமூக அநீதி மற்றும் மோசமான பேராசை ஆகியவற்றைக் கண்டு, அன்புடன் ஒழுக்கத்தை அவர்களுள் கொண்டு வந்தார். தனிநபர்கள், தலைவர்கள், நியாயாதிபதிகள், தீர்க்கதரிசிகள் (வ. 3-4) என்றெல்லாம் அல்ல. எல்லோரும் அவருக்கு முன்பாக குற்றவாளிகள்தான்.

பாவத்தில் நிலைத்திருந்த இயேசுவின் விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினார், “தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக் கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத் தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்” (ரோமர் 2:5,6). எனவே, துக்கம் ஏற்படுத்தாதபடிக்கு இயேசுவின் வல்லமையில், நம்முடைய பரிசுத்தமான, அன்பான தகப்பனைக் கனம்பண்ணும் விதத்தில், மணந்திரும்பி வாழ்வோம்.