திசைமாற்றியபோது சாத்தியமற்ற ஒன்று நிகழ்ந்தது. ஆகஸ்ட் 2021இல், ஐடா என்ற சூறாவளிக் காற்று, லூசியானா கடற்கரையில் கரையொதுங்கியது. அங்கே ஆச்சரியமான “எதிர்மறையான ஓட்டத்தை” தோற்றுவித்தது. பலமணி நேரங்கள் தண்ணீர் மேல்நோக்கி பாய ஆரம்பித்தது. 

ஒரு சூறாவளியானது அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பத்தாயிரம் அணுகுண்டுகளுக்குச் சமமான ஆற்றலைச் செலவழிக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்! ஓடும் நீரின் போக்கை மாற்றும் இத்தகைய நம்பமுடியாத ஆற்றலானது, யாத்திராகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவத்தில் இடம்பெற்றுள்ள “எதிர்மறையான ஓட்டத்தை” எனக்கு நினைவூட்டியது. 

நூற்றாண்டுகளாய் எகிப்தியரிடம் அடிமைப்பட்டிருந்த இஸ்ரவேலர்கள் அங்கிருந்து புறப்பட்டு செங்கடலின் கரைக்கு வந்து சேர்கின்றனர். அவர்களுக்கு முன்பாக பெரிய சமுத்திரமும், அவர்களைத் துரத்திக்கொண்ட பார்வோனின் சேனைகளும் வந்துகொண்டிருந்தது. அதுபோன்ற சாத்தியமற்ற சூழ்நிலைகளில், “கர்த்தர், இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்… இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்” (யாத்திராகமம் 14:21-22). அந்த ஆச்சரியமான சம்பவத்தை சாட்சியிட்ட பின்பு, “ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்(தனர்)” (வச. 31). 

தேவனுடைய வல்லமையை சாட்சியிடும்போது ஆச்சரியத்தில் மூழ்குவது இயல்பானது. ஆனால் அதோடு மக்கள் நின்றுவிடவில்லை, தேவன் மீது “விசுவாசம் வைத்தார்கள்” (வச. 31). 

தேவனுடைய படைப்பில் அவருடைய வல்லமையை நாம் சாட்சியிடும்போது, நாமும் அவருடைய மகத்துவத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு அவர் மீது நம்பிக்கை வைக்க முடியும்.