வரலாற்றில் பெயர்பதித்திருக்கும் பேச்சாளர்கள் அனைவரும் சமுதாயத்தில் ஓர் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தவர்கள். ஃபிரடெரிக் டக்ளஸை சிந்தித்துப் பாருங்கள். ஏற்றத் தாழ்வு ஒழிப்பு மற்றும் சுதந்திரம் பற்றிய அவரது உரைகள் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வர உதவிய ஒரு இயக்கத்தைத் தூண்டின. அவர் அமைதியாய் இருக்க தீர்மானித்திருந்தால் என்னவாகியிருக்கும்? மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதற்கும் உதவுவதற்கும் நம் குரலைப் பயன்படுத்துவதற்கான திறனை நாம் அனைவரும் பெற்றுள்ளோம். ஆனால் துணிந்து பேசுவதற்கான பயம் நம்மை முடக்குகிறது. இந்த பயம் நம்மை ஆளுகை செய்யும்போது, தெய்வீக ஞானம் மற்றும் உற்சாகத்தின் பிறப்பிடமும் ஆதாரமுமான தேவனை நாம் நோக்கிப் பார்ப்போம்.
தேவன் ஏரேமியாவை தேசங்களுக்கு விரோதமாய் தீர்க்கதரிசனம் உரைக்க அழைப்புவிடுக்கும்போது, அவன் தன் சொந்த திறமைகளைக் குறித்து சந்தேகப்பட்டான். அவன் “இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்” (எரேமியா 1:6) என்று கதறுகிறான். ஆனால் எரேமியாவின் சத்தத்தை எதிர்கால சந்ததிகள் கேட்கும் அந்த வாய்ப்பை இழக்கச்செய்யும் அவனுடைய பயம் அவனை ஆளுகைசெய்யாத வண்ணம் தேவன் அவனைப் பார்த்துக்கொண்டார். தான் சொல்லுவதை மட்டும் நீ செய்தால் போதுமானது என்று அவனுக்கு தேவன் ஆலோசனை சொல்லுகிறார் (வச. 7).
தேவன் நம்மை எப்படி பயன்படுத்த விரும்புகிறார் என்பதை நமக்கு காண்பிக்கும்பொருட்டு அவரிடத்தில் கேட்கும்போது, நம்முடைய வாழ்க்கையில் அவருடைய சித்தத்தை தேவன் வெளிப்படுத்துவார். அவருடைய உதவியுடன், நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு தைரியமாக நம் குரலை உயர்த்துவோம்.
உங்கள் குரலைப் பயன்படுத்த நீங்கள் எப்போது பயந்தீர்கள்? பேசுவதற்கு தேவனுடைய பலத்தையும் ஞானத்தையும் நீங்கள் எப்படி சார்ந்துகொள்ளலாம்?
பரலோகப் பிதாவே, என்னுடைய வார்த்தையின் வல்லமை மூலமாய் என்னைச் சுற்றியுள்ளவர்களின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு என்னை பெலப்படுத்தும்.