ஓர் அதிகாரி என்னை அழைத்த பின்பு, நான் மாவட்ட சிறைச்சாலைக்குள் நுழைந்தேன். பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டேன். நெரிசலான லாபியில் அமர்ந்தேன். வெகு நேரம் காத்திருப்பதைக் குறித்து சிறுபிள்ளைகள் குறைகூறுவதைக் கண்டு பெரியவர்கள் நடுங்குவதையும் பெருமூச்சு விடுவதையும் பார்த்து, நான் அமைதியாக ஜெபித்தேன். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ஓர் ஆயுதமேந்திய காவலர் என்னுடைய பெயர் அடங்கிய பட்டியலில் இருந்து அழைத்தார். அவர் என் குழுவை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்று எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலிகளில் அமரும்படிக்கு சைகை செய்தார். தடிமனான கண்ணாடி ஜன்னலின் மறுபக்கம் இருந்த நாற்காலியில் என் சித்தி மகன் அமர்ந்து டெலிபோன் ரிசீவரை எடுத்தபோது, என் இயலாமையின் ஆழம் என்னை ஆட்கொண்டது. ஆனால் நான் கண்ணீர் சிந்தி அழுதபோது, என்னுடைய வளர்ப்பு மகன் இன்னும் தேவனுக்கு அருகில் தான் இருக்கிறான் என்பதை தேவன் எனக்கு உறுதிபடுத்தினார்.
சங்கீதம் 139இல், தாவீது தேவனைப் பார்த்து, “நீர் என்னை.. அறிந்திருக்கிறீர்… என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்” என்று சொல்லுகிறான். அனைத்தும் அறிந்த தேவனை அறிக்கையிட்ட தாவீது, தேவனுடைய பாதுகாப்பையும் பராமரிப்பையும் உணருகிறான் (வச. 5). தேவனுடைய ஆச்சரியமான அறிவைக் குறித்தும் அவருடைய தொடுதலைக் குறித்தும் ஆச்சரியப்பட்ட தாவீது இரண்டு கேள்விகளின் மூலம் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறான்: “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?” (வச. 7).
நாமோ அல்லது நம்முடைய நேசத்திற்குரியவர்களோ கடினமான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும்போது, அது நம்மை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும். அதுபோன்ற சூழ்நிலையில், தேவனுடைய கரம் நமக்கு ஆதரவாகவும் உறுதியாகவும் இருக்கும். அவர் நம்மை மீட்கமுடியாத தூரத்தில் நாம் இருப்பதாக ஒருவேளை நாம் எண்ணினாலும், அவருக்கு எட்டும் தூரத்தில் தான் நாம் இருக்கிறோம் என்பதை நாம் மறந்துபோகவேண்டாம்.
தேவனுடைய ஆச்சரியமான அறிவையும், அவர் நம்மை அணுகும் விதத்தையும் அறிவது உங்கள் விசுவாசத்தை எவ்விதம் கட்டுகிறது? நீங்கள் கைவிடப்பட்டதாகவோ அல்லது உதவியற்றவர்களாகவோ எண்ணும்போது தேவன் உங்களை எவ்வாறு தேற்றினார்?
அன்பான தகப்பனே, நீர் எப்போதும் எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் எட்டும் தூரத்தில் இருக்கிறீர் என்பதை நினைவுகூருவதற்கு எனக்கு உதவிசெய்யும்.