2021 ஆம் ஆண்டில், ஒரு பன்னாட்டு முயற்சியானது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை ஏவுவதற்கு வழிவகுத்தது. இது பிரபஞ்சத்தை சிறப்பாக ஆராய பூமியிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மைல்கள் தூரம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த விசித்திரமான தொலைநோக்கியானது, ஆழமான விண்வெளியில் ஊடுருவி நட்சத்திரங்களையும் மற்ற வான அதிசயங்களையும் ஆராய்ச்சி செய்யும்.
இது உண்மையில் ஆச்சரியமான ஒரு வானியல் தொழில்நுட்பம். இது நேர்த்தியாய் வேலை செய்தால், அற்புதமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை நமக்குக் கொடுக்கும். ஆனால் அதன் பணி புதியது அல்ல. ஏசாயா தீர்க்கதரிசி நட்சத்திரங்களை அண்ணாந்து பார்த்து, “உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே” (ஏசாயா 40:26) என்று விவரிக்கிறார். “இரவுக்கு இரவு” (சங்கீதம் 19:2) அவைகள் அனைத்தும் இந்த ஆச்சரியமான அண்டசராசங்களை சிருஷ்டித்த தேவனுடைய புகழையும், இரவு வானத்தை ஒளிரச்செய்யும் ஒளிக்கீற்றுகளைக் குறித்தும் விவரித்துக்கொண்டிருக்கின்றன (வச. 3).
ஒளிரக்கூடிய இதுபோன்ற நட்சத்திரங்கள் அனைத்தையும் அவர் தொகையிடுகிறார்: “அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்” (சங்கீதம் 147:4). சில நேர்த்தியான கண்டுபிடிப்புகளை மனிதன் கண்டுபிடித்து அவற்றை ஆகாயத்திற்கு ஆராய்ச்சி செய்யும்பொருட்டு அனுப்பிவைப்பதின் மூலம், வசீகரிக்கும் ஆச்சரியங்களை அறிய நேரிடுகிறது. அவைகள் அனைத்தும் அவற்றை உண்டாக்கியவரின் மகிமையை விளங்கப்பண்ணுகிறது. ஆம்! “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது” (19:1), நட்சத்திரங்களும் வெளிப்படுத்துகிறது.
நட்சத்திரங்களும் அண்டசராசரத்தில் இருக்கும் அனைத்தும் எவ்விதம் தேவனைக் குறித்து பேசுகிறது? அவருடைய வல்லமையைக் குறித்து எண்ணும்போது, எப்படிப்பட்ட எண்ணங்களும் உணர்ச்சிகளும் உங்களை ஆட்கொள்ளுகிறது?
பரலோகப் பிதாவே, நாம் பார்த்து வியக்கத்தக்க வகையில் இந்த உலகத்தைப் படைத்தமைக்காய் உமக்கு நன்றி.