மேலைநாடுகளின் விசித்திரமான விடுமுறை தினங்கள் சற்று வேடிக்கையாக இருக்கும். பிப்ரவரியில் மட்டும் ஸ்டிக்கி ரொட்டி தினம், வாள் விழுங்குவோர் தினம், நாய் பிஸ்கட் பாராட்டு தினம் கூட! இன்றைக்கு, தாழ்மையாய் இருத்தல் தினம் என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகளவில் நல்லொழுக்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பணிவு, நிச்சயமாகக் கொண்டாடத் தகுந்தது. ஆனால் சுவாரஸ்யமாக, அவ்வாறு எப்போதும் இருந்ததில்லை.
பண்டைய உலகில் தாழ்மை ஒரு பலவீனமாகக் கருதப்பட்டது, அது நற்பண்பு அல்ல, அதற்கு மாறாகக் கௌரவமே மதிப்பிற்குரியதாய் இருந்தது. ஒருவரின் சாதனைகளைப் பற்றி பெருமை பேசுவது வழக்கமாய் இருக்க, நீங்கள் உங்கள் நிலையை உயர்த்த வேண்டுமேயன்றி அதை ஒருபோதும் குறைக்கக் கூடாது. தாழ்மை என்பது எசமானுக்கு வேலைக்காரன் போன்ற பணிவு என்று பொருள். ஆனால், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது இவை அனைத்தும் மாறிவிட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அங்கு, “தேவனுடைய ரூபமாயிருந்தவர்” , “அடிமையின் ரூபமெடுத்து” தனது தெய்வீக அந்தஸ்தை விட்டுக்கொடுத்து, மற்றவர்களுக்காக இறப்பதற்குத் தன்னைத் தாழ்த்தினார் (பிலிப்பியர் 2:6-8). அத்தகைய விந்தையான செயல், தாழ்மை என்பதற்கு புதியதோர் அர்த்தம் கொடுத்தது . முதல் நூற்றாண்டின் இறுதியில், கிறிஸ்து செய்தவற்றின் விளைவாக உலகப்பிரகாரமான எழுத்தாளர்கள் கூட மனத்தாழ்மையை ஒரு நற்பண்பு என்று அழைத்தனர்.
ஒவ்வொரு முறையும், ஒருவர் இன்று தாழ்மையுடன் இருப்பதற்காகப் பாராட்டப்படும்போது, நற்செய்தி மறைமுகமாகப் பிரசங்கிக்கப்படுகிறது. இயேசு இல்லாமல், தாழ்மை நன்மையான ஒன்றாக இருந்திருக்காது. அல்லது “தாழ்மையுடன் இருத்தல்” என்ற நாளும் இருந்திருக்காது. கிறிஸ்து நமக்காகத் தம்முடைய அந்தஸ்தைத் துறந்து, வரலாற்றின் மூலம் தேவனின் தாழ்மையான தன்மையை வெளிப்படுத்தினார்.
தாழ்மை என்பது இன்னும் பலவீனமாகப் பார்க்கப்பட்டிருந்தால், உலகம் எப்படி இருக்கும்? இன்று நீங்கள் எந்த உறவுகளில் இயேசுவின் மனத்தாழ்மையை வெளிக்காட்டுவீர்கள்?
இயேசுவே, தாழ்மையுள்ளவராக இருந்ததற்காக நான் உம்மை துதிக்கிறேன். நான் செய்யவேண்டிய காரியமாக இன்று உமக்காக என்னைத் தாழ்த்திக் கொள்ள விரும்புகிறேன்!