ஹங்கேரியைச் சேர்ந்த கணிதவியலாளர் ஆபிரகாம் வால்ட், 1938 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு வந்த பிறகு இரண்டாம் உலகப் போரின் முயற்சிகளுக்குத் தமது திறன்களை வழங்கினார். இராணுவம் தனது விமானத்தை எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து பாதுகாப்பதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருந்தது, எனவே வால்ட் மற்றும் புள்ளியியல் ஆராய்ச்சி குழுவில் உள்ள அவரது சகாக்களிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து இராணுவ விமானங்களை எவ்வாறு சிறப்பாகப் பாதுகாப்பது என்பதைக் கண்டுபிடிக்க,  திரும்பி வரும் விமானங்களை ஆய்வு செய்து அவை எங்கு அதிகம் சேதமடைந்துள்ளன என்பதைப் பார்க்கத் தொடங்கினர். அவ்வாறு திரும்பிய விமானத்தில் ஒரு பகுதியில் மட்டும் தாக்கப்பட்டும் இன்னும் இயங்கக்கூடியதாக இருந்ததைக் கண்டுபிடிக்கும் நுண்ணறிவை வால்ட் பெற்றிருந்தார். விபத்துக்குள்ளான விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் பகுதிகளை அவர் கண்டறிந்தார். ஆனால் என்ஜின் பகுதியில் தாக்கப்பட்ட விமானங்கள் செயலிழந்துவிட்டன, அவற்றை ஆய்வு செய்ய முடியவில்லை.

நம்முடைய மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதியான நமது இதயத்தைப் பாதுகாப்பது பற்றி சாலொமோன் கற்றுக்கொடுக்கிறார். அவர் தமது மகனுக்கு “[அவரது] இதயத்தைக் காத்துக்கொள்” என்று அறிவுறுத்துகிறார், ஏனென்றால் அதிலிருந்து மற்ற அனைத்தும் பாய்கின்றன. (நீதிமொழிகள் 4:23) தேவனுடைய அறிவுரைகள் வாழ்க்கை பாதையில் நம்மை நடத்துகின்றன, தவறான முடிவுகளிலிருந்து நம்மைத் திசைதிருப்புகின்றன, மேலும் நம் கவனத்தை எங்குச் செலுத்த வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கின்றன.

அவருடைய அறிவுரைகளுக்குச் செவிசாய்ப்பதன் மூலம் நாம் நம் இதயத்திற்குக் கவசம் அணிவித்தால், நாம் நம் “காலைத் தீமைக்கு விலக்கி” மேலும் தேவனுடனான நமது பயணத்தில் உறுதியாக இருப்போம் (வச. 27). நாம் ஒவ்வொரு நாளும் எதிரியின் எல்லைக்குள் நுழைகிறோம், ஆனால் தேவனின் ஞானம் நம் இதயங்களைக் காத்துக்கொண்டால், தேவனின் மகிமைக்காகச் சிறப்பாக வாழ்வதற்கான நமது பணியில் கவனம் செலுத்த முடியும்.