சமீபத்தில் என் தோழி எனக்குப் பரிசளித்தபோது, ​​நான் ஆச்சரியப்பட்டேன். அவளிடமிருந்து இவ்வளவு நேர்த்தியான பரிசுக்கு நான் தகுதியானவள் என்று நான் நினைக்கவில்லை. நான் அனுபவிக்கும் சில பணிச்சுமைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு அவள் அதை அனுப்பினாள். ஆனாலும், வயதான பெற்றோர், மாற்றுத்திறனாளி குழந்தைகள், வேலையில் பாரம், திருமண உறவில் நெருக்கடிகள் என என்னை விட அதிக மன அழுத்தத்தை அவள் அனுபவித்தாள். அவள் தன்னை காட்டிலும் என்னைப் பற்றி நினைத்தாள் என்று என்னால் நம்ப முடியவில்லை, அவளுடைய எளிய பரிசு கண்ணீரை வரவழைத்தது.

உண்மையில், நாம் அனைவரும் தகுதியற்றவர்களாகவே ஒரு பரிசைப் பெற்றவர்கள். பவுல் அதை இவ்வாறு சொல்கிறார், “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்… அவர்களில் பிரதான பாவி நான்” (1 தீமோத்தேயு 1:15 ). ஒரு காலத்தில் அவர், ” தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்(தார்).. கர்த்தரின் கிருபை கிறிஸ்து..பெருகிற்று (வ. 13–14). உயிர்த்த இயேசு, கிருபையின் இலவச பரிசைப் பற்றிய ஆழமான புரிதலை பவுலுக்கு வழங்கினார். இதன் விளைவாக, அந்தப் பரிசைப் பெறுவதற்குத் தகுதியற்றவராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை அவர் கற்றுக்கொண்டார், அவர் தேவனுடைய அன்பின் வல்லமையான கருவியானார், மேலும் தேவன் அவருக்காக என்ன செய்தார் என்பதைப் பற்றி பலரிடம் கூறினார்.

தேவனின் கிருபையால் மட்டுமே நாம் ஆக்கினைக்குப் பதிலாக அன்பையும், நியாய தீர்ப்புக்குப் பதிலாக இரக்கத்தையும் பெறுகிறோம். இன்று, தேவன் அருளிய தகுதிக்கு மேலான கிருபையைக் கொண்டாடுவோம், மற்றவர்களுக்கு அந்த கிருபையை வெளிப்படுத்துவதற்கான வழிகளைத் தேடுவோம்.