என் கைப்பேசியை முகத்தைச் சுருக்கி பெருமூச்சோடு பார்த்தேன். கவலை என் புருவத்தைச் சுருக்கியது. தோழிக்கும் எனக்கும் எங்கள் குழந்தைகள்  குறித்து கடுமையான கருத்து வேறுபாடு இருந்தது, மேலும் நான் அவளை அழைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். நான் அதைச் செய்ய விரும்பவில்லை, ஏனென்றால் எங்கள் கருத்துக்கள் இன்னும் முரண்படுகின்றன, ஆனால் நாங்கள் கடைசியாக இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தபோது நான் தயவாக அல்லது பணிவாக இருக்கவில்லை என்பதை நான் அறிவேன்.

தொலைப்பேசியில் அழைக்கும் முன் நான் யோசித்தேன், அவள் என்னை மன்னிக்கவில்லை என்றால்? அவள் நட்பைத் தொடர விரும்பவில்லை என்றால் என்ன செய்வது? அப்போதுதான், ஒரு பாடலின் வரிகள் நினைவுக்கு வந்து, நான் தேவனிடம் என் பாவத்தை ஒப்புக்கொண்ட தருணத்திற்கு என்னை அழைத்துச் சென்றது. தேவன் என்னை மன்னித்து, குற்ற உணர்ச்சியிலிருந்து என்னை விடுவித்ததை அறிந்ததால் நான் நிம்மதியடைந்தேன்.

உறவு ரீதியான பிரச்சினைகளை நாம் தீர்க்க முயலும்போது பிறர் நமக்கு எவ்வாறு ஒத்துழைப்பார்கள் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் நமது பங்கிற்குச் செய்யக்கூடியவையெல்லாம், தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டு, தேவையான மாற்றங்களைச் செய்வதே. முடிவைத் தேவன் கையாளட்டும். மனிதர்களால் ஏற்படும் தீராத பிரச்சினைகளின் வலியை நாம் தாங்க வேண்டியிருந்தாலும், தேவனோடு நமக்குச் சமாதானம் எப்போதும் உண்டு. தேவனின் கரங்கள் திறந்திருக்கின்றன, நமக்குத் தேவையான கிருபையையும் கருணையையும் காட்ட அவர் காத்திருக்கிறார். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9).