முதல் கணவர் இறந்த பிறகு ஜீனா மறுமணம் செய்து கொண்டார். அவளுடைய புதிய கணவரின் குழந்தைகள் அவளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது அவரும் இறந்துவிட்டதால், அவர்கள் தங்கள் குழந்தைப் பருவ வீட்டில் தங்கியதற்காக அவளை வெறுக்கிறார்கள். அவளுடைய கணவன் அவளுக்காக ஒரு சிறிய தொகையை விட்டுச் சென்றான்; அவள் தங்கள் ஆஸ்தியைத் திருடுகிறாள் என்று அவனுடைய குழந்தைகள் சொல்கிறார்கள். ஜீனா மிகவும் சோர்ந்துவிட்டாள், மேலும் அவள் வெறுத்தும் போனாள்.
நகோமியின் கணவர், குடும்பத்தை மோவாபுக்கு மாற்றினார். அங்கு அவரும் அவர்களது இரண்டு மகன்களும் இறந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நகோமி தம் மருமகள் ரூத்தைத் தவிர, வெறுங்கையுடன் பெத்லகேமுக்குத் திரும்பினார். நகரமே கலங்கி, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள் (ரூத் 1:19). “எனது இனிமையானவள்” என்று பொருள்படும் அந்தப் பெயரை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று அவள் சொன்னாள். அவர்கள் அவளை “மாரா” என்று அழைக்க வேண்டும், அதன் அர்த்தம் “கசப்பு” ஏனெனில், “நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்” (வ. 20–21) என்றாள்.
உங்கள் பெயர் கசப்பாக இருக்க வாய்ப்பு உள்ளதா? நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது உடல்நலக் குறைவால் நீங்கள் ஏமாற்றமடைந்துள்ளீர்கள். நீங்கள் சிறப்பாகத் தகுதி பெற்றீர்கள். ஆனால் அத்தகுதிக்குரிய நன்மையைப் பெறவில்லை. இப்போது நீங்கள் கசப்பாக இருக்கிறீர்கள்.
நகோமி கசந்துபோய் பெத்லகேமுக்குத் திரும்பி வந்தார், ஆனால் அவர் திரும்பி வந்தார். நீங்களும் திரும்ப வீட்டுக்கு வரலாம். பெத்லகேமில் பிறந்த ரூத்தின் வம்சாவளியான இயேசுவிடம் வாருங்கள். அவருடைய அன்பில் இளைப்பாறுங்கள்.
காலப்போக்கில், தேவன் நகோமியின் கசப்பிற்குப் பதிலாக தம் பரிபூரணத் திட்டத்தின் நிறைவேற்றத்தின் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் (4:13-22). அவரால் உங்கள் கசப்பையும் மாற்ற முடியும். அவரிடம் வீட்டிற்கு வாருங்கள்.
எந்த பெயர் உங்களை விவரிக்கிறது? இயேசுவில் நீங்கள் யார் என்பதை விவரிக்கும் பெயரில் நீங்கள் வாழ்வதன் அர்த்தம் என்ன?
தகப்பனே, உமது குமாரனில் என் இளைப்பாறுதலை காண நான் வீட்டிற்கு வருகிறேன்.