Archives: ஜனவரி 2023

சிறிய துவக்கம்

1883இல் ப்ரூக்ளைன் பாலம் கட்டிமுடிக்கப்பட்டபோது, அதுவே “உலகத்தின் எட்டாம் அதிசயம்” என்று கருதப்பட்டது. ஒரு கோபுரத்திலிருந்து அடுத்த முனையிலிருக்கும் கோபுரத்திற்கு கட்டப்பட்டிருந்த ஒரு கேபிள் கம்பியானது அதைத் தாங்குவதற்கு போதுமானதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய கேபிள், மற்ற மூன்றையும் ஒன்றாக இணைக்கும் வரை கூடுதல் கம்பிகள் முதலில் சேர்க்கப்பட்டன. கடைசியில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட துத்தநாகப்பூச்சி பூசப்பட்ட கம்பிகள் இணைக்கப்பட்டு, அந்த தொங்குபாலத்தை அதின் நாட்களில் தாங்குவதற்கு ஏற்ற விதத்தில் அமைந்தது. சாதாரணமான ஒன்றிலிருந்து துவங்கி ஆச்சரியமான ஒரு படைப்பாய் இந்த பரூக்ளின் பாலம் மாறியது. 

இயேசுவின் வாழ்க்கை வெகு சாதாரணமாய் துவங்கியது. ஒரு சிறிய பட்டணத்தில் வைக்கோல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இந்த குழந்தை பிறந்தது (லூக்கா 2:7). இந்த எளிமையான பிறப்பை மீகா தீர்க்கதரிசி, “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்” (மீகா 5:2; காண்க மத்தேயு 2:6). எளிமையான துவக்கத்தைக்கொண்ட இந்த ராஜா மற்றும் மேய்ப்பர் “பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது (மீகா 5:4). 

இயேசுவின் வாழ்க்கை வெகு எளிமையாய் துவங்கியது. அவருடைய பூமிக்குரிய வாழ்க்கையானது,  “சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி,” தன்னை தாழ்த்தி, ஒரு குற்றவாளியாய் சிலுவையில் மரிக்க அனுமதிக்கப்பட்டது (பிலிப்பியர் 2:8). அவருடைய விலையேறப்பெற்ற அந்த தியாகத்தினால் தேவனுக்கும் நமக்கும் இருந்த இடைவெளியை அவர் பூர்த்திசெய்து, அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளினார். இந்த பண்டிகை நாட்களில், கிறிஸ்து என்னும் தேவனுடைய இந்த விலையேறப்பெற்ற பரிசை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் அவரை விசுவாசிக்கக்கூடுமானால், அவர் செய்த நன்மைகளுக்காய் அவரை தாழ்மையாய் துதியுங்கள். 

மகிழ்ச்சியை தேர்வுசெய்!

ஜனவரி 15, 1919 அன்று, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், மூல சர்க்கரை பாகை ஏற்றிச் செல்லும் ஒரு டேங்கர் வாகனம் வெடித்தது. 75 லட்சம் லிட்டர் மூல சர்க்கரை பாகு, பதினைந்து அடி அலையாய் 30 மைல் வேகத்தில் தெருவில் பாய்ந்து, ரயில் வண்டிகள், கட்டிடங்கள், மக்கள் மற்றும் விலங்குகளை மூழ்கடித்தது. இந்த மூல சர்க்கரை பாகு அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று 21 பேரின் உயிரைக் குடித்து, 150 பேருக்கு மேலானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 

இந்த மூல சர்க்கரைப் பாகைப் போன்று, சில நல்ல விஷயங்கள் கூட நம்மை எதிர்பாராத விதமாய் முழ்கடிக்கலாம். தேவன் இஸ்ரவேலருக்கு வாக்குப்பண்ணிய தேசத்திற்குள் பிரவேசிக்கும் முன்பு, மோசே அவர்களைப் பார்த்து, தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது அது தங்களுடைய சாமர்த்தியத்தினால் வந்தது என்று சொல்லவேண்டாம் என்று எச்சரிக்கிறார்: “நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி... உன் இருதயம் மேட்டிமையடையாமலும்… உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்” இருக்கும் படிக்கும் இந்த ஐசுவரியத்திற்கு அவர்களின் சாமர்த்தியம் காரணம் என்று சொல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். அதற்கு பதிலாக, “உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக... ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (உபாகமம் 8:12-14, 17-18) என்று அறிவுறுத்துகிறார். 

நம்முடைய சரீர ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதார தேவைகள் போன்ற அனைத்து காரியங்களும் தேவனுடைய கரத்தினால் அருளப்பட்ட ஈவுகள். நாம் கடினமாக உழைத்து சம்பாதித்தாலும், அவரே நம்மை தாங்குகிறவர். திறந்த கைகளோடு நம்முடைய ஆசீர்வாதத்தை பற்றிக்கொண்டு, நம் மீதான அவருடைய இரக்கங்களுக்காய் அவரை துதிப்போம்.