டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் கொடூரமான படுகொலை 1960களில் அமெரிக்க சட்ட உரிமைகள் இயக்கத்தின் முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால் அவர் கொலைசெய்யப்பட்டு சரியாய் நான்கு நாட்கள் கழித்து, விதவையாக்கப்பட்ட அவருடைய மனைவி கொரேட்டா ஸ்காட் கிங் தம்முடைய கணவருடைய ஸ்தானத்தில் நின்று ஓர் அமைதியான எதிர்ப்பு அணிவகுப்பை நடத்தினார். கொரேட்டா நீதியை நிலைநாட்டுவதில் பேரார்வம் கொண்டிருந்தார். பல விஷயங்களில் சாதனையாளராகவும் திகழ்ந்தார். 

இயேசு, “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” (மத்தேயு 5:6) என்று சொல்லுகிறார். தேவன் ஒரு நாள் பூமியில் வந்து அநீதிகளை தகர்த்து நீதியை நிலைப்படுத்துவார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதுவரை கொரேட்டாவைப் போன்று கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி பூமியில் நீதியை நிலைப்படுத்த முயற்சிப்போம். ஏசாயா 58 ஆம் அதிகாரம், தேவன் தம் ஜனங்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார் என்பதை பட்டியலிடுகிறது: “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும்.. நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும்.. பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்” (வச. 6-7). ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காய் பிரயாசப்படுவது நம்முடைய தேவபக்தியை வெளிப்படுத்துகிற ஒரு விதம். ஏசாயா, தேவ ஜனம் நீதியைத் தேடுவதை விடியற்கால வெளிச்சத்துடன் ஒப்பிட்டு, அது சுகவாழ்வை கொண்டுவரும் என்று கூறுகிறார் (வச. 8). 

இன்று தேவன், அவருடைய நீதியைக் குறித்த நம்முடைய பசிதாகத்தை பிரதிபலிக்க உதவிசெய்வாராக. அவருடைய வழியில் நாம் நீதியை தேடும்போது, அதில் நாம் திருப்தியடைவோம் என்று வேதம் சொல்லுகிறது.