நான் சமீபத்தில் ஆச்சரியமான ஒன்றை கண்டுபிடித்தேன். என்னுடைய வீட்டின் அருகில் போன்றவைகள் மரங்களுக்கு இடையே அமைந்திருந்த அழுக்கான ஒரு பாதையின் வழியாய் சென்றபோது, அங்கே ஒரு விளையாட்டு மைதானம் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்தேன். குச்சிகளால் ஆன ஏணி, மரக்கிளைகளில் தொங்கவிடப்பட்டிருந்த ஊஞ்சல்கள், மேலும் கொம்புகளுக்கிடையே தொங்குபாலம் போன்றவை இடம்பெற்றிருந்தது. யாரோ ஒருவர், இந்த பழைய கயிறுகளையும் கொம்புகளையும் விசித்திரமான ஒரு படைப்பாய் மாற்றியிருந்தார்.
சுவிஸ் மருத்துவரான பால் டூர்னியர், நாம் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டவர்களாதலால் (ஆதியாகமம் 1:26-27) விசித்திரங்களை கண்டுபிடிக்கிறவர்களாய் படைக்கப்பட்டிருக்கிறோம் என்கிறார். தேவன் உலகத்தை விசித்திரமாய் உண்டாக்கியபடியால் (வச. 1-25), மனிதர்களை நன்மை தீமை அறியத்தக்கவர்களாய் உண்டாக்கியபடியால் (3:5-6), “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்(புங்கள்)” (ஆதியாகமம் 1:28) என்று நமக்கு கட்டளையிட்டபடியாலும், நாம் இந்த உலகத்தை கனிகளோடு ஆண்டுகொள்ளும்போது ஆச்சரியங்களை கண்டுபிடிக்கிறவர்களாயும், புதிய காரியங்களை தோற்றுவிக்கிறவர்களாயும் இருக்கிறோம். அந்த கண்டுபிடிப்புகள் சிறியதோ அல்லது பெரியதோ, அது மற்றவர்களுக்கு பிரயோஜனப்படும் விதத்தில் இருக்கவேண்டும். அந்த விளையாட்டு மைதானத்தை உண்டாக்கியவர்கள், அதை பயன்படுத்தும் மக்களுடைய மகிழ்ச்சியினால் திருப்தியடைவார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஒரு புதிய இசையை தோற்றுவிப்பதாகட்டும், சுவிசேஷ ஊழியத்திற்கான புதிய யுக்தியாயிருக்கட்டும், உடைந்துபோன திருமண வாழ்வை மீண்டும் புதிதாய் துவக்குவதாய் இருக்கட்டும், இதுபோன்ற அனைத்துவிதமான விசித்திரங்களும் நம்மை ஊக்கப்படுத்தக்கூடியவைகள். எந்த புதிய காரியத்தை செய்வதற்கு நீங்கள் தற்போது தூண்டப்படுகிறீர்கள்? தேவன் தற்போது உங்களை புதிய விசித்திரத்திற்கு நேராய் வழிநடத்திக்கொண்டிருக்கலாம்.
எப்போதெல்லாம் தேவனை விசித்திரமான படைப்பாளியாய் வேதத்தில் நீங்கள் காணமுடிகிறது? அவருடைய படைப்புகள் நம்மை எவ்விதம் ஊக்குவிக்கிறது?
ஆச்சரியங்களின் தேவனே, உம்முடைய அன்பினிமித்தம் உமக்காகவும் மற்றவர்களுக்காகவும் புதிய விசித்திரத்தை நான் செய்ய எனக்கு உதவியருளும்.