சாண்ட் மார்டின்ஸ் என்று சொல்லப்படக்கூடிய ஒருவகையான பறவைகள் ஆற்றங்கரை மணலில் தன்னுடைய கூட்டை அமைத்துக்கொள்ளக் கூடியவை. தென்கிழக்கு இங்கிலாந்தின் நில மேம்பாடு வாரியத்தினரால் அவை தங்கும் மணல் கூடுகளின் விகிதம் கணிசமாய் குறைந்தது. குளிர்காலத்தில் இடம்பெயரும் இப்பறவைகள் திரும்பி வரும்போது, அவை தம் கூடுகளை அமைத்துக்கொள்வதற்கு போதுமான இடங்கள் இல்லாமல் திணறின. அவைகளை பாதுகாக்க எண்ணிய அதன் பாதுகாவலர்கள், அவை தங்குவதற்கென்று பல செயற்கையான மணல் வீடுகளை அமைத்துக் கொடுத்தனர். செயற்கையான மணலைக் கொண்டு மணல் சிற்பம் வடிக்கும் நிறுவனத்தின் துணையோடு பல ஆண்டுகள் எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாய் வசிக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது.  

இந்த இரக்கமுள்ள செய்கை, இயேசு தம் சீஷர்களை ஆறுதல்படுத்த பயன்படுத்திய வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றன. அவர் இந்த உலகத்தை விட்டு பரமேறியபோது, சீஷர்கள் அவரோடு வரமுடியாததால், நான் போய் பரலோகத்தில் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்துவேன் என்று வாக்களிக்கிறார் (14:2). இயேசு அவர்களால் விட்டு சீக்கிரம் கடந்துபோய்விடுவார், அவர்களை அவரை பின்பற்றி செல்ல முடியாது என்னும் நிஜம் அவர்களை வருத்தப்படுத்தினாலும், அவருடைய இந்த வருகையானது அவர்களையும் நம்மையும் பரலோகத்திற்கு வரவேற்கும் தெய்வீகமான முயற்சியே. 

இயேசுவின் சிலுவை தியாகம் இல்லாதிருக்குமானால், பிதாவின் வீட்டில் ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கும் “அநேக வாசஸ்தலங்களுக்கு” (வச. 2) நமக்கு வரவேற்பு கிடைக்காமலிருந்திருக்கும். நமக்கு முன்னே அவற்றை ஆயத்தப்படுத்துவதற்காய் சென்ற இயேசு, மீண்டும் திரும்பி வந்து அவருடைய தியாகமான அன்பின் மீது விசுவாசம் வைப்பவர்கள் அனைவரையும் தம்மோடு அழைத்துச் செல்வார். அவரோடு மகிழ்ச்சியாய் நித்தியத்தில் நாம் இளைப்பாறுவோம்.