என்னுடைய புதிய கண்ணாடியை அணிந்துகொண்டு பலிபீடத்திற்கு வந்து அமர்ந்தேன். அங்கிருந்து பார்க்கையில் என்னுடைய சிநேகிதி ஒருத்தி திருச்சபையின் வழிப்பாதைக்கு அருகில் அமர்ந்திருந்ததை பார்த்தேன். அவளைப் பார்த்த நான் கையசைத்து சைகை செய்தேன். அவள் நான் இருக்கும் இடத்திலிருந்து தூரத்திலிருந்தாலும் அவளை எட்டித் தொடும் தூரத்தில் இருப்பதுபோல் எனக்கு தோன்றியது. ஆராதனை முடிந்த பின்பு, நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு போகும்போது தான் எனக்கு தெரிந்தது, அவள் எப்போதும் அமர்ந்திருக்கும் இருக்கையில் தான் அமர்ந்திருந்தாள் என்பது. என்னுடைய புதிய கண்ணாடியில் சில மாற்றங்கள் செய்திருப்பதால் அவள் வழக்கத்திற்கு மாறாக, எனக்கு அருகில் அமர்ந்திருப்பதுபோல் தெளிவாய் பார்க்க முடிந்தது. 

ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் வெளிப்பட்ட தேவன், பாபிலோன் சிறையிருப்பில் சிக்கியிருக்கும் இஸ்ரவேலர்களுக்கு ஒரு புதிய பார்வை வேண்டும் என்று விரும்பினார். அவர், “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்… நான் வனாந்தரத்திலே வழியை… உண்டாக்குவேன்” (ஏசாயா 43:19) என்று உரைத்தார். அவருடைய இந்த நம்பிக்கையின் செய்தியானது, தேவன் அவர்களை உருவாக்கினார், மீட்டெடுத்தார், என்றும் அவர்களோடே இருக்கிறார் என்ற தகவலையும் மறுவுறுதிப்படுத்தியது. “நீ என்னுடையவன்” (வச. 1) என்று தேவன் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். 

நீங்கள் இன்று எந்த பிரச்சினையின் ஊடாய் கடந்து சென்றாலும், பழமையானதை பின்னுக்கு தள்ளிவிட்டு புதிய பாதையில் நடக்கும் புதிய பார்வையை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அருளுவார். தேவனுடைய அன்பினாலே (வச. 4), அது உங்களை முழுவதுமாய் தாங்கியிருக்கும். உங்களுடைய வேதனை மற்றும் கட்டுகளின் மத்தியில் தேவன் உங்களுக்காக செய்யும் கிரியைகளை உங்களால் பார்க்க முடிகிறதா? நம்முடைய வனாந்தரமான சூழ்நிலைகளில் தேவன் நமக்காக செய்யும் கிரியைகளைப் பார்க்கக்கூடிய ஆவிக்குரிய கண்ணாடியை நாம் அணிந்துகொள்ள பிரயாசப்படுவோம்.