காத்மாண்டுவில் உள்ள எனது நண்பனின் சபைக்குச் சென்றிருந்தேன், ஆலயவாசலில் அவன் வைத்திருந்த குறிப்பைக் கண்டேன். அதிலே, “சபையென்பது பாவிகளுக்கு மருத்துவமனையேயன்றி, பரிசுத்தவான்களின் அருங்காட்சியகமல்ல” என்றிருந்தது. அருங்காட்சியகம் என்ற சொல்லாடல் எனக்கு விகற்பமாயிருப்பினும், மருத்துவமனை என்ற மேற்கோள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுவே சரி என்பது என் தனிப்பட்ட கருத்து.

மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாக ஊழியர்கள். நோயாளிகள் எனப் பலரைக் கொண்டதுதான் மருத்துவமனை. ஒரு மருத்துவமனையில், நாம் அறிந்த அனைத்து வகையான உணர்ச்சிகளையும் காணலாம். மருத்துவர்களும், செவிலியர்களும் நோயாளிகளின் பேரில் நாட்டமுடையவர்களாக, அவர்களுடைய மனப்பான்மைக்கேற்றவாறு மாறுகிறார்கள். அநேகர் இப்படி சேவை செய்கிறார்கள்.

சி.எஸ்.லூயிஸ், “நீங்களிருக்கும் அதே மருத்துவமனையில் நான் உங்கள் சகநோயாளி என்றெண்ணிக்கொள்ளுங்கள், நான் உங்களுக்கு சற்றுமுன்னரே அனுமதிக்கப்பட்டேன். ஆகையால் உங்களுக்கு ஆலோசனை சொல்கிறேன்” என்றார். “எனக்கு நோயில்லை, இனிமேலும் நோய்வாய்ப்படமாட்டேன்” என்பதுபோல அந்த பரிசேயன் சுயநீதியின் ஆணவத்தால் மேட்டிமையின் பீடத்தில் பேசினது போலல்லாமல்,  தன்னை சகநோயாளியாக பாவித்து, எந்த வகையிலும் தான் சிறந்தவனல்ல என்பதுபோல சொன்னார்.

எந்தவொரு பாவமும் அறியாத இயேசு பாவிகளுக்கும்  ஆயக்காரர்களுக்கும்

சிநேகிதரானார். அவருடைய இரக்கமும் கிருபையும் தேவைப்படும் பாவிகளுக்கு நாம் சிநேகிதரா? என்பதே கேள்வி.