மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தமது பர்மிங்காம் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தின் வார்த்தைகள், கொரோனா தொற்றுநோயின் நாட்களின் சுயதனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு சமயங்களில் உண்மையாயிருந்தது. அதில் அவர், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கையில், ஒரு நகரத்தில் என்ன நடக்கிறது என்பதை மட்டும் பொருட்படுத்திவிட்டு, மற்ற நகரங்களில் நடப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடமுடியாது. “நாம் விதியின் ஆடை பின்னலில், பிணைக்கப்பட்டுள்ளோம்” என்று அவர் சொல்லுகிறார். ஒருவருக்கு தனிப்பட்ட விதத்தில் ஏற்படும் பாதிப்பானது, அனைவருக்கும் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
அதேபோல், கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க, உலகெங்கிலும் உள்ள நகரங்கள் மற்றும் நாடுகள் முழு அடைப்பை அமுல்படுத்தி, நமது இணைப்பை வெளிப்படுத்தியது. ஒரு நகரத்தை பாதித்தது விரைவில் மற்றொரு நகரத்தையும் பாதிக்கலாம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மற்றவர்களுக்கு எவ்வாறு அக்கறை காட்ட வேண்டும் என்று தேவன் தம் மக்களுக்கு போதித்தார். மோசே மூலம், இஸ்ரவேலர்களுக்கு வழிகாட்டவும், அவர்கள் ஒற்றுமையாய் வாழவும் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். “உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்” (லேவியராகமம் 19:16) என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், “பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக” (வச. 18) என்றும் போதித்தார். மற்றவர்களுடைய வாழ்க்கையை தங்கள் வாழ்க்கை போலவே மதிப்பிட்டு பார்க்காவிட்டால், சமுதாயம் உடைய துவங்கும் என்பதை தேவன் நன்கு அறிந்திருந்தார்.
தேவனுடைய போதனைகளை நாமும் ஏற்றுக்கொள்ளலாம். நம்முடைய அன்றாட செயல்களில் நாம் ஈடுபடும்போது, மற்றவர்ளோடு நாம் எந்த அளவிற்கு தொடர்பில் இருக்கிறோம் என்பதை அறிந்து, அவர்களை நேசிக்கவும் உதவிசெய்யவும் தேவனை நாடுவோம்.
ஏன் இயேசு மத தலைவர்களிடம் உன்னைப்போல் பிறரையும் நேசி என்று சொன்னார்;? அதை எவ்வாறு இன்று உங்களுடைய வாழ்க்கையில் கடைப்பிடிப்பீர்கள்?
அன்பான சிருஷ்டிகரே, உம்முடைய அன்பையும் கிருபையையும் பகிர்ந்தளிக்க இன்று எனக்கு உதவிசெய்யும்.