நிச்சயதார்த்த மோதிரங்களுக்காக நான் ஷாப்பிங் செய்யும்போது, சரியான வைரத்தை கண்டுபிடிப்பதற்கு பல மணிநேரம் செலவிட்டேன். நல்ல தரமான ஒன்றை நான் தவறவிட்டுவிடக்கூடாது என்கிற எண்ணம் என்னை வாட்டியது.
என்னுடைய இந்த அலைபாயும் மனநிலையை, பொருளாதார உளவியலாளரான பேரி ஸ்வார்ட்ஸ், “திருப்தியாளர்” என்று அழைக்காமல் “அதிகப்படுத்துகிறவர்” என்று அழைக்கிறார். ஒரு திருப்தியாளர், அவரின் தேவை என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்வார். ஆனால் அதிகப்படுத்துபவர்களுக்கு சிறந்ததைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் (குற்றமனசாட்சி) இருக்கும். அநேக வாய்ப்புகளுக்கு மத்தியில் தேர்ந்தெடுக்கும் நம்முடைய திறன்? கவலை, மனச்சோர்வு மற்றும் அதிருப்தி. சமூகவியலாளர்கள் இந்த மனநிலையை, “தவறவிட்டுவிடுவோமோ என்கிற பயம்” என்று அடையாளப்படுத்துகின்றனர்.
நிச்சயமாக, வேதத்தில் அதிகப்படுத்துபவர் அல்லது திருப்தியாளர் போன்ற வார்த்தைகளை நாம் காண முடியாது. ஆனால் இதேபோன்ற ஒரு யோசனையை நாம் காண்கிறோம். 1 தீமோத்தேயுவில், பவுல் தீமோத்தேயுக்கு இந்த உலகத்தின் விஷயங்களைக் காட்டிலும் தேவனைத் தேடும்படியாக சவால் விடுக்கிறார். உலகத்தின் “நிறைவாக்கும்” வாக்குறுதிகள் ஒருபோதும் நம்மை திருப்தியாக்காது. அதற்கு பதிலாக தீமோத்தேயு தனது அடையாளத்தை தேவனில் வேரூன்ற வேண்டும் என்று பவுல் விரும்பினார்: “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” (6:6).
“உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” (வச. 8) என்று பவுல் கூறும்போது, அவர் “திருப்தியாளர்” என்பது நன்றாய் தெரிகிறது.
உலகம் கொடுக்கும் நிறைவை அடைய நான் தீர்மானிக்கும்போது நான் திருப்தியற்றவனாக இருக்க நேரிடுகிறது. ஆனால் நான் தேவனில் கவனம் செலுத்தி, என்னுடைய இந்த மனநிலையை கைவிடும்போது, என் ஆத்துமா மெய்யான மனநிறைவையும் இளைப்பாறுதலையும் அடைகிறது.
நீங்கள் திருப்தியான வாழக்கை வாழ விரும்பும் நபரா? ஏன்? அல்லது ஏன் அப்படியில்லை? தேவனுடனான உங்கள் உறவு, வாழ்க்கையில் உங்கள் மனநிறைவை எந்த விதத்தில் பாதிக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்கள்?
பிதாவே, இந்த உலகத்தால் என்னை ஒருபோதும் திருப்திபடுத்த முடியாத வகையில் உம்மால் என்னை திருப்தியடையச் செய்யமுடியும் என்பதை நான் நம்புகிறேன். உம்முடனான எனது உறவில் திருப்தியையும் மனநிறைவையும் அடைய எனக்கு உதவிசெய்யும்.