ஆகஸ்டு 2020ல், ஸ்விட்சர்லாந்தின் ஓல்டன் பகுதியில் உள்ள மக்கள், சாக்லேட் மழை பெய்ததால் திடுக்கிட்டனர்! அங்கிருந்த ஒரு சாக்லேட் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அங்கிருந்த சாக்லேட் மூலப்பொருட்கள் காற்றில் கலந்தன. அதின் விளைவாக அங்கிருந்த சாலைகள் மற்றும் கார்களின் மீது அவை படிந்து, அந்த இடமே சாக்லேட் மணம் வீசக்கூடியதாக மாறியது.
அதேபோன்று வானத்திலிருந்து மிகவும் ருசியான உணவு அதிசயவிதமாய் பொழிகிறதென்றால், யாத்திராகமத்தில் தேவன், இஸ்ரவேலர்களை போஷித்த விதத்தை எண்ணி ஆச்சரியப்படுகிறேன். எகிப்திலிருந்து தப்பிப் பிழைத்து, வனாந்திரத்தில் ஆகாரமும் தண்ணீருமின்றி கடினமான சவால்களை இஸ்ரவேலர்கள் சந்திக்கின்றனர். ஜனங்களின் அவலநிலையால் மனதுருகின தேவன், “நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்” (யாத்திராகமம் 16:4) என்று வாக்குப்பண்ணுகிறார். அடுத்த நாள் காலையில் பூமியின் மீது ஒரு மெல்லிய படிவம் படிந்தது. அன்றிலிருந்து, அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து தேவன் மன்னாவை வருஷிக்கப்பண்ணுகிறார்.
இயேசு பூமியிலிருந்த நாட்களில், ஒரு பெரிய கூட்டத்தை போஷித்ததைப் பார்த்த மக்கள், அவர் தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதை நம்ப ஆரம்பித்தனர் (யோவான் 6:5-14). ஆனால் இயேசு, தற்காலிகமான பசியை அல்ல, நித்திய ஜீவனை அளிக்கும் (வச. 51) “ஜீவ அப்பம் நானே” (வச. 35) என்கிறார்.
ஆவிக்குரிய போஷாக்கிற்காய் பசியோடிருக்கும் நமக்கு இயேசு, தேவனுடனான முடிவில்லா வாழ்வளிக்கிறார். அதுபோன்ற ஆழமான மனதின் ஏக்கங்களை திருதிப்படுத்தவே அவர் வந்தாரென்று அவரை நம்பி, விசுவாசிப்போமாக.
இயேசுவே உங்களின் தேவை என்பதை எப்போதறிந்தீர்கள்? ஆவிக்குரிய தேவையில் நீங்கள் திருப்தியடைந்திருக்கிறீர்கள் என்பதை எப்போது உணர்ந்தீர்கள்?
இயேசுவே, உம்முடைய ஜீவனைக் கொடுக்க இந்த பூமியில் வந்ததற்காய் உமக்கு நன்றி. அதினால் நாங்கள் பிதாவோடு நித்திய வாழ்க்கையை பெற்றிருக்கிறோம்.