ஜனவரி 2020இல் லாஸ் ஏஞ்சலஸில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஒன்பது பேர் பலியாயினர். “பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபே பிரயண்ட்டும், அவருடைய மகள் ஜியானாவும் (கிகி) மற்றும் ஏழுபேர் இந்த விபத்தில் பலியாயினர்” என்று அநேக செய்திகள் இவ்வாறே வெளிவந்தன.
பிரபலமான நபர்கள் இதுபோன்ற கொடூரமான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்கையில், அவர்களுக்கு தனி முக்கியத்துவம் அளிப்பது இயல்பானதும், புரிந்துகொள்ளக்கூடியதும் தான். கோபே மற்றும் அவரின் பதின்பருவ மகள் கிகி ஆகியோரின் மரணம் நம்மை துயரில் ஆழ்த்துகிறது. அதேநேரத்தில் விபத்தில் மரித்த மற்ற ஏழுபேர்களின் மரணங்கள் (பேடன், சாரா, கிறிஸ்டினா, அலிசா, ஜாண், கெரி மற்றும் ஆரா) எந்த விதத்திலும் தாழ்ந்ததில்லை.
ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை நாம் சிலவேளைகளில் உணரவேண்டும். பிரபலமானவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் சமுதாயம் முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், உங்கள் அண்டை வீட்டாரை காட்டிலும், வீதிகளில் விளையாடும் பிள்ளைகளைக் காட்டிலும், கடினமான சூழ்நிலையில் உள்ளவர்களை காட்டிலும் அல்லது உங்களைக் காட்டிலும் இந்த புகழும், பிரபலமும் ஒருவரையும் முக்கியமானவர்களாய் மாற்றாது.
எழையோ பணக்காரனோ (நீதிமொழிகள் 22:2), பூமியிலுள்ள எல்லா மனிதர்களும் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளனர் (ஆதியாகமம் 1:27). யாரும் தேவனுடைய பார்வையில் அதிக மேன்மையானவர்கள் இல்லை (ரோமர் 2:11). அனைவருக்கும் இரட்சகர் அவசியம் (3:23).
திருச்சபையிலோ (யாக்கோபு 2:1-4) அல்லது சமுதாயத்திலோ, நாமும் பாரபட்சமில்லாமல் செயல்படும்போது நாம் நம்முடைய தேவனை மகிமைப்படுத்துகிறோம்.
ஏழையோ பணக்காரனோ, பிரபலமானவரோ அடையாளமில்லாதவரோ, எல்லாருக்கும் அன்பைப் பிரதிபலிக்க நீங்கள் என்ன செய்ய முடியும்? இயேசு இந்த வகையான அன்பை எவ்வாறு வெளிப்படுத்தினார்?
பரலோகப்பிதாவே, வாழ்க்கையில் எந்த நிலையில் இருந்தாலும், அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் அன்பையும், இரக்கத்தையும் காண்பிக்க எனக்கு உதவும்.