ரோம் தேசத்தின் முதல் பேரரசர் அகுஸ்து ராயன் (கி.மு.63- கி.பி. 14). இவர் சட்ட ஒழுங்கின் ஆட்சியாளராய் தன்னை ஸ்தாபித்துக்கொள்ள எண்ணியவர். அடிமைத்தனம், இராணுவ அடக்குமறை, இலஞ்சம் போன்றவற்றின் மீது தன் ஆட்சியை ஸ்தாபித்தாலும், ஓரளவுக்கு நீதி வழங்கும் முறையை சீரமைத்து, தன் குடிமக்களுக்கு லஸ்டீசியா என்னும் நீதிதெய்வத்தை அறிமுகப்படுத்தினான். தற்போது நீதிமன்றங்களில் நீதிதேவதை என்று குறிப்பிடப்படுவது இதுதான். மேலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, பூமியின் எல்லைகள் பரியந்தம் மகிமைப்படப் போகிற உலக இரட்சகரின் பிறப்பு சம்பவம் (மீகா 5:2-4) நிகழுவதற்கு மரியாளும், யோசேப்பும் பெத்லகேமுக்கு வர காரணமாயிருந்த ஜனத்தொகை கணக்கெடுப்பை கட்டளையிட்டவர் இவரே.
ஆனால் இந்த ராஜா, மெய்யான நீதியை நிலை நாட்டுவதற்காய் வாழ்ந்து தன்னுடைய ஜீவனையும் கொடுப்பார் என்பதை அகுஸ்துராயனும், உலகமும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நூற்றாண்டுகளுக்கு முன்பதாய் மீகா தீர்க்கதரிசியின் நாட்களில், தேவனுடைய ஜனம் பொய், கலகம், மற்றும் “துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்கள்” (6:10-12) ஆகியவைகளினால் வழி விலகியிருந்தனர். தேவனுக்கு பிரியமான தேசம் அவரைப் பொருட்படுத்தவில்லை. அவர்களின் கிரியைகளின் தன்மையை அவர்களுக்கு உணர்த்தி, அவருடன் தாழ்மையாய் நடக்கவேண்டும் என்று தேவன் ஏங்கினார் (வச.8).
காயப்பட்ட, மறக்கப்பட்ட, மற்றும் ஆதரவற்ற மக்கள் எதிர்பார்த்திருந்த நியாயத்தை அவர்களுக்கு இந்த பணிவிடையாளனான ராஜா காண்பித்தார். தேவனுக்கும் மனிதனுக்குமிடையிலும், மனிதனுக்கும் சக மனிதனுக்குமிடையிலும், உள்ள சரியான உறவை பார்ப்பதற்கு மீகாவின் தீர்க்கதரிசனம், இயேசு கிறிஸ்துவில் நிறைவேற வேண்டியிருந்தது. அது அகுஸ்து ராயனுடைய சட்ட ஓழுங்கு ஆதிக்கத்தினால் சாத்தியமல்ல, மாறாக, இரக்கம், தயவு, மற்றும் பணிவிடையாளனான ராஜாவாம் இயேசுவின் ஆவியினால் உண்டாகும் விடுதலையில் மட்டுமே அது சாத்தியமாகிறது.
நீதி, அன்பு, இரக்கம், மற்றும் தாழ்மை ஆகிய குணாதிசயங்களைக் கைக்கொள்வது என்பது உங்களுக்கு என்ன அர்த்தம் கொடுக்கிறது? இவைகள் இயேசுவினால் எவ்வாறு கடைபிடிக்கப்பட்டது என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?
தகப்பனே, உம்முடைய நாமத்தினாலே, நீர் என்னுடைய வாழ்க்கையில் கொண்டு வரும் அனைவருக்கும் நீதி செய்ய எனக்கு உதவிச் செய்யும்.