ஜான் நாஷ் என்பவருக்கு கணிதத்தில் அவருடைய முன்னோடிப் பணியை பாராட்டி 1994இல் பொருளாதாரத்திற்கான நோபல்பரிசுகொடுக்கப்பட்டது. அவரது சமன்பாடுகள், வணிகத்தில் போட்டி மனப்பான்மையைக் குறித்து புரிந்துகொள்வதற்கு உலகெங்கிலும் உள்ள வணிகங்களில் பரவலாய் பயன்படுத்தப்படுகிறது. “அழகான மூளை” (a beautiful mind) என்ற தலைப்பில் அவருடைய வாழ்க்கை புத்தகமாக்கப்பட்டு, திரைக்காவியமாக்கப்பட்டது. அவருடைய மூளை விசேஷமான திறன் கொண்டது இல்லையெனினும் அதைக் கொண்டு அவர் என்ன சாதித்தார் என்பதே இங்ஙனம் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியான ஏசாயா, சுவிசேஷகனுடைய பாதங்களை அழகு என்று வர்ணிக்கிறார். அதின் மாம்சரீதியான அமைப்பை விவரிப்பதற்காய் இல்லை; மாறாக, அவர்கள் செய்கிற செய்கையை அழகு என்று வர்ணிக்கிறார். “சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன” (ஏசாயா 52:7). கர்த்தருக்கு உண்மையில்லாமல் வாழ்ந்ததின் விளைவாய் எழுபது ஆண்டுகள் சிறையிருப்பிற்குள் பிரவேசித்த இஸ்ரவேலர்களுக்கு “கர்த்தர் … எருசலேமை மீட்டுக்கொண்டார்” (வச. 9) என்னும் அவர்களின் சுயதேசம் திரும்பும் நற்செய்தியானது கர்த்தருடைய ஸ்தானாதிபதிகளின் மூலம் அறிவிக்கப்பட்டது.
இஸ்ரவேலின் இராணுவ பராக்கிரமத்தையோ அல்லது எந்த மாம்சீக முயற்சியையோ நற்செய்தி என்று அறிவிக்கவில்லை. மாறாக, அவர்களுக்காய் வெளிப்பட்ட “பரிசுத்த புயத்தை” (வச.10) நற்செய்தி என்று அழைக்கிறது. கிறிஸ்துவின் தியாகத்தினால் நம்முடைய ஆவிக்குரிய எதிரியோடு போராடி வெற்றியை ருசிபார்க்கும் நமக்கு இன்றும் அது உண்மையாகவே இருக்கிறது. அதின் விளைவாய் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு சமாதானத்தையும், நற்செய்தியையும், இரட்சிப்பையும் அறிவிக்கும் நற்செய்தியின் ஸ்தானாதிபதிகளாய் நாம் மாற்றப்பட்டுள்ளோம். அதை அழகான பாதங்களுடன் செயல்படுத்துகிறோம்.
கிறிஸ்துவின் தியாகத்தைக் குறித்த நற்செய்தியை உங்களுக்கு அறிவித்தது யார்? அதை நீங்கள் யாருக்கு சொல்லப் போகிறீர்கள்?
கிறிஸ்துவின் சிலுவை தியாகத்தைக் குறித்த நற்செய்தியை அறிவிக்கும் நபரை எனக்காய் அனுப்பியதற்காய் நன்றி தகப்பனே. அதை மகிழ்ச்சியோடு மற்றவர்களுக்கு அறிவிக்க எனக்கு உதவிசெய்யும்.
Evangelism: Reaching Out Through Relationships at DiscoverySeries.org/Q0913 –ஐ வாசிக்கவும்.