தன் தகப்பனுடைய மரணத்திற்குபின், அவருடைய உடைமைகளைத் திரும்பப் பெற அருண், அவர் தங்கியிருந்த முதியோர் இல்லத்திற்குச் சென்றான். அதின் பணியாளர், அவனிடம் இருப் பெட்டிகளை ஒப்படைத்தார். மகிழ்ச்சியாய் இருப்பதற்கு அதிக சொத்துத் தேவையில்லை என்பதை அன்றுணர்ந்தேன் என அருண் கூறினான்.
அவன் தந்தை சதீஷ், எவரையும் புன்னகையுடன் வரவேற்று, கவலையற்ற எளிய வாழ்வு வாழ்ந்தவர். மற்றவர்களை எப்போதும் ஊக்கப்படுத்துகிறவர். அவருடைய மகிழ்ச்சிக்கு காரணம், அந்த பெட்டிக்குள் வைக்க முடியாது வேறொரு “சொத்து” அவரிடம் இருந்தது: அவருடைய மீட்பராகிய இயேசுவின் மீதான அசைக்க முடியாத விசுவாசமே அது.
“பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்” (மத்தேயு 6:20) என்று, இயேசு நம்மை உற்சாகப்படுத்துகிறார். வீடு, வாகனம் மற்றும் ஆஸ்தி ஆகியவைகளை நாம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அவர் சொல்லவில்லை. ஆனால் நம்முடைய இருதயத்தின் நோக்கம் அவைகளையே பற்றியிருக்கக் கூடாது என்கிறார். சதீஷின் பற்று எதிலிருந்தது? மற்றவர்களை நேசிப்பதின் மூலம் தேவனை நேசிப்பதில் இருந்தது. அவர் வசித்த அந்த அறைக்குள் மேலும், கீழுமாக நடந்துச்சென்று பார்ப்பவர்களையெல்லாம் வாழ்த்தி உற்சாகப்படுத்துவாராம். யாரேனும் அழுதுகொண்டிருந்தால், அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதற்கும், அவர்களின் மனக்குமுறலைக் கேட்பதற்கும், அவர்களுக்காய் ஜெபிப்பதற்கும், இவர் அங்கேயிருப்பாராம். தேவனை மகிமைப்படுத்துவதிலும், மற்றவர்களுக்கு உதவிசெய்வதிலும் அவர் அதிக ஆர்வம் காட்டினார்.
தேவனையும், மற்றவர்களையும் நேசிப்பதிலிருந்து நம்மை திசைத்திருப்பும் அற்பமான உலககாரியங்களால் நாம் மகிழ்ச்சியடைய முடியுமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். “உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (வச. 21). நாம் எதை அதிகமாக மதிக்கிறோம் என்பதை நாம் வாழும் விதமே பிரதிபலித்துவிடும்.
உங்களுடைய வாழ்க்கையின் முக்கியத்துவங்கள் மாறுகிற வழிமுறைகள் உங்கள் வாழ்வில் உள்ளனவா? நீங்கள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புவதாக நினைக்கிறீர்கள்?
அன்பான தேவனே, நான் உம்மை நேசிக்கிறேன். நீர் என்னுடைய வாழ்க்கையின் சிறந்த நேசராயிருக்க விரும்புகிறேன். உம்மைப் போல் எப்படி மாறுவது என்பதை எனக்குக் காண்பியும்.