ஒரு விமானம் தாங்கி கப்பலை நாங்கள் சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு சிறியரக போர்விமானத்தின் விமானி, இத்தகைய குறுகலான ஓடுபாதையில் விமானங்கள் உயரே எழும்ப மணிக்கு 56 கி.மீ வேகத்தில் காற்றடிக்க வேண்டும் என விளக்கினார். இந்த நிலையான காற்றுக்காக கப்பலின் கேப்டன், கப்பலை காற்றுமுகமாய் திருப்புவார். “விமானத்தின் பின்புறத்திலிருந்து தானே காற்றடிக்க வேண்டும்?” என நான் கேட்டேன். “இல்லை விமானம் காற்றுக்கெதிரே பறக்க வேண்டும், அது உயரே எழும்ப அதுதான் ஒரே வழி” என விமானி பதிலளித்தார்.

வாக்குப்பண்ணப்பட தேசத்திலே தம்முடைய ஜனங்களுக்கு காத்துக்கொண்டிருந்த “காற்றுமுகத்தினூடே” அவர்களை நடத்த யோசுவாவை தேவன் அழைத்தார். யோசுவாவிற்கு இரண்டு காரியங்கள் தேவைப்பட்டது. உட்புறமாக அவர், “மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு.”(யோசுவா 1:7) இருக்க வேண்டும் மேலும் வெளிப்புறமாக அவருக்கு சவால்கள் இருக்க வேண்டும். அரனான பட்டணங்களை எதிர்கொள்ளுதல் (6:1–5), மனசோர்வுண்டாக்கும் தோல்விகள் (7:3–5), ஆகானின் திருட்டு (7:16–26), மேலும் தெடர்ச்சியான யுத்தங்கள் (அதிகாரங்கள் 10-11) என இதுபோன்ற அனுதின பணிகளில் ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர்களை வழிநடத்த வேண்டும்.

தேவனுடைய கற்பனைகளிலிருந்து யோசுவாவிற்கு உந்துதல் உண்டான காலமுழுதும் யோசுவாவின் முகத்திற்கெதிரே வீசிய காற்று அவருடைய வாழ்வையே உயரே எழுப்பியது. அவர் “நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க..அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிரு(க்க)..இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிரு(க்க)” வேண்டும், “அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய்” (வ.7 -௮) என்று தேவன் கூறினார்.

என்ன நடந்தாலும் தேவனுடைய வழிகளை பின்பற்ற தீர்மானித்துள்ளீர்களா? சவால்களை எதிர்பாருங்கள். தைரியமாக காற்றுமுகத்திற்கெதிரே பறந்துபோங்கள், நீங்கள் உயரே எழும்புவதை காண்பீர்கள்.