வழிகாட்டுதலை குறித்த ஒரு கட்டுரையில் ஹன்னா ஸ்செல் என்பவர், வழிகாட்டியானவர் ஆதரிப்பவராக, சவால் மிக்கவராக, ஊக்கமளிப்பவராக இருப்பது அவசியம் ஆனால் “முதலாவதும், மிக முக்கியமானதும் யாதெனில் ஒரு நல்ல வழிகாட்டி உங்களை காண வேண்டும்….. அறியப்படுதல் என்பது விருதுகளினாலும், பிரபலமடைவதினாலும் மட்டும் உண்டாவதில்லை சாதாரணமாக ‘காணக்கூடியவராய்’ இருப்பதனாலும் தான், அதுவே மனிதனின் அடிப்படை தேவை. மக்கள் அறியப்பட்டவர்களாய், அங்கீகரிக்கப்பட்டவர்களாய், நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்க வேண்டும்.
புதிய ஏற்பாட்டில், பர்னபா என்பவர் (அவருடைய பெயருக்கு “ஆறுதலின் மகன்” என்று அர்த்தம்) தன்னை சுற்றிலுமிருந்த மக்களை சந்திப்பதில் சாமர்த்தியசாலி. அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 இல், மற்ற சீஷர்கள் சவுலை குறித்து பயந்திருந்தபோது, இவரோ அவனுக்கு ஒரு வாய்ப்பளிக்க விரும்பினார்.(வ.26) சவுல் (இவன் பவுல் என்றும் அழைக்கப்பட்டான் 13:9) இயேசுவின் விசுவாசிகளை துன்புறுத்துகிறவனாக இருந்தான்.(8:3), ஆகையால் அவனை உண்மையான சீடனாக மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை (9:26).
பல நாட்கள் கழித்து, பவுலும், பர்னபாவும் அவர்கள் “கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று” (15:36) போய்ப்பார்க்க தங்களோடு மாற்குவை கூட்டிக்கொண்டு போவதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அவர்களோடு மாற்கு வருவது பவுலுக்கு ஏற்றதாய் தோன்றவில்லை காரணம் அவர், அவர்களை இதற்கு முன்னரே தனியேவிட்டு பிரிந்து போயிருந்தார். சுவாரசியமாக, பவுல் பின்னர் மாற்குவின் உதவியை கோருகிறார் “மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.” (2 தீமோத்தேயு 4:11).
பவுல், மாற்கு என இருவரையும் சந்திக்க பர்னபா நேரம் ஒதுக்கினார். ஒருவேளை நாம் பர்னபாவை போல மற்றொருவரிடம் உள்ள ஆற்றலை உணருபவராக இருக்கலாம் அல்லது ஒரு ஆவிக்குரிய வழிகாட்டி தேவைப்படும் நபராக நாம் இருக்கலாம். நாம் ஊக்குவிக்க கூடிய நபர்களுக்கு நேராக நம்மை நடத்தவும், நம்மை ஊக்குவிக்க கூடியவர்களை நமக்கு நேராக கொண்டு வரவும் தேவனை நாம் கேட்போம்.
உங்களில் நமபிக்கை வைத்த ஒருவரால் ஊக்குவிக்கப்படீர்களா? திறனுள்ள ஆனால் ஊக்கம் தேவைப்படும் மற்றவர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவக்கூடும்?
பிதாவே, மற்றவர்களை சந்தித்து, ஊக்குவிக்க எனக்கு உதவும். என்னை ஊக்குவிக்கும் ஒருவருக்கு நேராக என்னை நடத்தும். நாங்கள் விசுவாசத்தில் கட்டப்பட, இனைந்து பணியாற்றும்படி செய்வதற்காக உமக்கு நன்றி.