அலாஸ்க்காவில் நடைபயணம் மேற்கொண்டிருந்த டிம், இதுவரை பார்த்திராத ஒன்றை அன்று சந்தித்தான். டிம், தொழில்ரீதியாகவும் கூட பனிப்பாறைகளை குறித்து படித்திருந்தாலும், அவைகளின் மேல் அதிகளவிலான பாசி உருண்டைகள் (ஒருவித செடி) படர்ந்திருப்பது அவனுக்கு முற்றிலும் புதியது. பல ஆண்டுகள் இந்த பிரகாசிக்கும் பச்சை நிற உருண்டைகளை கவனமாக ஆராய்ந்த பின், டிம்மும் அவன் சகாக்களும், இவ்வகையான பனிப்பாறை பாசியானது, மரங்களில் காணப்படும் பாசி உருண்டைகளை போல ஒன்றோடொன்று இணைக்கப்படாமல் இருப்பதையும், இன்னும் ஆச்சரியமாக இவை ஒரு மந்தையைப்போலவும், கூட்டமாகவும் ஒற்றுமையாக நகர்வதை கண்டுபிடித்தனர். முதலில், டிம்மும் அவன் சகாக்களும் இவைகள் காற்றினால் நகர்கின்றனவோ அல்லது மலையில் கீழ்நோக்கி சறுக்கி விழுகின்றனவோ என்று சந்தேகித்தனர் ஆனால் அவர்களின் ஆராய்ச்சி அத்தகைய யூகங்களை பொய்யாக்கியது.
அந்த பாசி உருளைகள் எவ்வாறு நகர்கின்றன என்று இன்னும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இத்தகைய மர்மங்கள் தேவனுடைய படைப்பாற்றலின் மகுடங்கள். அவருடைய சிருஷ்டிப்பின் பணியில், தேவன் நிலத்தை மரங்களும், செடிகளும் முளைக்கும் “தாவரங்களின் விளைச்சலுக்காக” நியமித்தார் (ஆதியாகமம் 1:11). “பனிப்பாறை எலிகள்” என்ற இவ்வகை பாசிகளையும் அவரே வடிமைத்தார். அவைகளுக்கு ஏற்ற சூழலை அளிக்கும் பனிப்பாறைகளை நாம் நேரில் பார்க்கும்வரை, நம்மில் அநேகர் இதை பார்த்திருக்க முடியாது.
1950களில் கன்டுபிடிக்கப்பட்ட முதற்கொண்டு இந்த “பனிப்பாறை எலிகள்”, தங்கள் தெளிவற்ற பச்சை படிவத்தினால் விஞ்ஞானிகளுக்கு களிப்பூட்டி வருகின்றன. தேவன், தான் படைத்த தாவரங்களை பார்த்து “அது நல்லது என்று கண்டார்.” (வ.12), நாம் தேவனின் தாவரவியல் வடிவமைப்புகளால் சூழப்பட்டுள்ளோம் அவை ஒவ்வொன்றும் அவரின் படிப்பின் வல்லமைகளை நிரூபித்து, அவரை தொழுதுகொள்ள நம்மை அழைக்கிறது. அவர் படைத்த ஒவ்வொரு மரத்தின்பேரிலும், செடியின்பேரிலும் நாம் மகிழலாம் ஏனெனில் அவைகள் நல்லது.
தேவனின் படைப்பில் ஏதோவொன்று எப்போது உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது? அவருடைய படைப்பின் செயலில் எந்த அம்சம் அவரை தொழுக்கொள்ள உங்களை அதிகமாக உந்துகிறது?
தேவனே, உமது வியப்பான படைப்பிற்காகவும், அதின்மூலம் உம்மை குறித்து அறிந்துகொள்ளும் பாக்கியத்திற்காகவும் உமக்கு நன்றி.