எங்குமுள்ள தமிழ் குடும்பங்களால் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு, பருவங்களின் மாற்றத்தோடு தொடர்புடையது. பொதுவாக ஜனவரி மாதத்தின் மத்தியில் வரும் இந்த காலம், குடும்பங்களை ஒன்றிணைக்கும் பல பாரம்பரியங்களை உடையது – அவற்றில் சில மிகவும் குறிப்பிடத்தக்கவை. புத்தாடைகளை வாங்கி அணிதல், நம்முடைய வீடுகளை தூய்மைப்படுத்துதல், மேலும் வீட்டில் தயாரித்த உணவு பண்டங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் என்று இவ்வாறு உறவுகள் பின்னப்படுகின்றன. துடைக்கப்பட்ட எழுத்துப் பலகை போல கடந்தகாலத்தை நமக்கு பின்பாக எறிந்துவிட்டு, வருடத்தை புதிதாக ஆரம்பிக்க இது நமக்கு நினைவூட்டுகிறது.
இந்தப் பாரம்பரியங்கள் கிறிஸ்துவுக்குள்ளான நமது புதிய வாழ்வையும் எனக்கு நினைப்பூட்டுகின்றன. நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தோம் அல்லது என்னவெல்லாம் செய்தோம் என்பதை பொருட்படுத்தாமல் அனைத்தையும் நமக்கு பின்பாக எறிந்திட முடியும். இயேசுவின் சிலுவை மரணத்தினால் நாம் முற்றிலும் மன்னிக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிந்தவர்களாக நம்முடைய கடந்தகாலத்தை நினைத்து வருந்துவதை நாம் நிறுத்தி, குற்ற உணர்வு நீங்கினவர்களாக நம்மால் இருக்க முடியும். மேலும் இயேசுவைப் போல மறுரூபமாக, பரிசுத்த ஆவியானவரை நாம் அனுதினமும் சார்ந்துகொண்டு புதிதாக துவங்கலாம்.
எனவேதான் பவுல், விசுவாசிகளுக்கு “பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.” (2 கொரிந்தியர் 5:17)
என நினைப்பூட்டுகிறார். நாமும் கூட இதை சொல்லலாம், ஏனெனில் எளிமையான ஆனால் வல்லமையான சத்தியமானது: “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி” (வ.19) என்பதே.
நம்மை சுற்றியுள்ள மற்றவர்கள், நம் கடந்தகால தவறுகளை மறக்க மனமில்லாதிருக்கலாம், ஆனால் தேவனுடைய பார்வையில் நமக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை (ரோமர் ) என்பதால் தைரியம் கொள்வோம். இயேசுவின் மூலமாக தேவன் நமக்களித்த புதிய துவக்கத்தை நாம் சுகமாய் அனுபவிப்போம்.
இயேசுவின் சிலுவை மரணத்தால் நீங்கள் முற்றிலும் மன்னிக்கப்பட்டீர்கள் என்பதை எவ்வாறு நினைப்பூட்டிக்கொள்வீர்கள்? வாழ்வை புதிதாய் துவங்க புதிய விசுவாசிகளை எவ்வாறு உற்சாகப்படுத்துவீர்கள்?
தேவனோடு என்னை ஒப்புரவாக்கி, உமக்குள் எனக்கு புதிய வாழ்வளிக்கும்; சிலுவையில் நீர் செய்த இரட்சிப்பின் கிரியைக்காக நன்றி இயேசுவே.