என்னுடைய நண்பர் விஜயனின் கால்பந்து பயிற்றுவிக்கிற பள்ளி, மாநில போட்டியில் கடும் போராட்டத்திற்கு பின் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. அவர்களின் போட்டி அணியினை கடந்த இரண்டு ஆண்டுகளாய் யாராலும் வெற்றிகொள்ள முடியவில்லை. நான் விஜயனை ஆறுதல்படுத்த ஒரு செய்தியை அனுப்பினேன். பதிலுக்கு அவர் “குழந்தைகள் மிகவும் போராடினார்கள்” என்று அனுப்பினார். 

எந்த பயிற்சியாளரும் போட்டிக்கு பின்பு விளையாட்டு வீரர்களை அவமானப்படுத்துவதில்லை. அவர்களுடைய தவறான தீர்மானத்திற்காகவும், அவர்கள் நழுவவிட்ட வாய்ப்பையும் சொல்லி அவர்களைத் திட்டுவதில்லை. அவர்களின் பலமான செய்கைகளைக் குறித்து அவர்களை பாராட்டவே செய்கின்றனர்.

அதேபோன்று கிறிஸ்துவின் விசுவாசிகள் யாவரும் அவரிடத்திலிருந்து கடினமான வார்த்தைகளை கேட்க விரும்புவதில்லை. கிறிஸ்து வரும் நாளில் நாம் அவருக்கு முன்பாக நிற்போம். அவர் நம்மை கனவீனப்படுத்துவதில்லை. அவரைப் பின்பற்றும்போது நாம் என்ன செய்தோம் என்பதையே அவர் பார்க்கிறார் (2 கொரி. 5:10; எபேசியர் 6:8). “நீ போராடினாய்! சிறப்பாய் செய்தாய்” என்று அவர் நம்மை பாராட்டுவார் என்று நம்புகிறேன். பவுல் அப்போஸ்தலர், “நல்ல போராட்டத்தைப் போராடினேன்” என்று கிறிஸ்துவினால் வரவேற்கப்படுவதற்கு காத்திருந்தார் (2 தீமோ. 4:7-8).

வாழ்க்கை என்பது நம்முடைய அழிவை எதிர்நோக்கும் கடுமையான எதிரியுடனான இடைவிடாத போராட்டம். இயேசுவைப்போல மாறுவதற்கும் மற்றவர்களை நேசிப்பதற்கும் நாம் ஏறெடுக்கும் எல்லா முயற்சியையும் அடைவதற்கு அவன் தடைசெய்வான். சில நல்ல வெற்றிகளையும், பல மனமுறியும் தோல்விகளையும் நாம் சந்திக்க நேரிடலாம். ஆனால் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு நித்திய ஆக்கினைத் தீர்ப்பில்லை (ரோமர் 8:1). தேவனுடைய குமாரனுடைய சார்பில் நாம் நிற்கும்போது, நாம் ஒவ்வொருவரும் தேவனால் புகழப்படுதலை அனுபவிக்கக்கூடும் (1 கொரி. 4:5).