தேவனுடைய பிரியமான பிள்ளையாய், அவளுடைய அங்கீகாரத்தை சாந்தி பெற்றுக்கொள்வதற்கு தேவன் அவளுக்கு எப்படி உதவிசெய்தார் என்று விளக்குவதற்கு, உரையாடலில் வேதவாக்கியத்தை மேற்கோள் காண்பித்தாள். தன்னுடைய வார்த்தைகளை நிறுத்தி, தேவனுடைய வார்த்தைகளை மேற்கோள் காண்பித்த இந்த பள்ளி மாணவி பயன்படுத்திய வசனங்கள் எனக்கே தடுமாற்றமாயிருந்தது. அவளை நடமாடும் வேதாகமம் என்று நான் பாராட்டியபோது அவளின் புருவம் உயர்ந்தது. அவள் யோசித்து, மனப்பாடம் செய்து ஒப்பிக்கவில்லை. அன்றாடம் வேதம் வாசிப்பதினால் அவளுடைய பேச்சில் வேத வாக்கியங்கள் இரண்டற கலந்துவிட்டது. தேவனுடைய நிலையான பிரசன்னத்தில் மகிழ்ந்த அவள், கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சத்தியத்தை பிரகடனப்படுத்த பயன்படுத்திக்கொண்டாள். வேதத்தை ஜெபத்தோடு வாசிக்கவும், நினைவில் வைத்துக்கொள்ளவும், வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தவும் தேவன் பயன்படுத்திய வாலிப பிள்ளைகளில் சாந்தி முதலாவது நபர் இல்லை.
தீமோத்தேயுவை உற்சாகப்படுத்தி தலைமைத்துவத்தில் அடியெடுத்து வைக்கத் தூண்டிய பவுல் அவர் மீதான நம்பிக்கையைப் பிரதிபலித்தார் (1 தீமோத்தேயு 4:11-16). தீமோத்தேயு சிறுபிராயத்திலிருந்தே வேதத்தில் உறுதியான அஸ்திபாரத்தை ஸ்தாபித்திருந்தார் என்று பவுல் பதிவுசெய்கிறார் (2 தீமோ. 3:15). பவுலைப் போலவே தீமோத்தேயுவும் சந்தேகத்தினால் சோதிக்கப்பட்டார். ஆனாலும் “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்று இருவரும் நம்பினர். “அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என்று அவர்கள் உணர்ந்தனர் (2 தீமோ. 3:16-17).
தேவனுடைய ஞானத்தை நம்முடைய இருதயத்தில் புதைத்து வைத்தால், நம்முடைய இயல்பான பேச்சில் அவருடைய சத்தியமும் அன்பும் வெளிப்படும். அப்போதே, தேவனுடைய நித்திய நம்பிக்கையை செல்லுமிடமெல்லாம் பறைசாற்றும் நடமாடும் வேதாகமமாய் நாம் இருக்கமுடியும்.
வேதாகமத்தை உங்களுடைய இருதயத்திலும் சிந்தையிலும் எப்படி புதைத்து வைப்பீர்கள்? தேவனுடைய சத்தியத்தையும் அன்பையும் மற்றவர்களுக்கு உறுதியாய் பகிர்ந்துகொள்ளும்பொருட்டு, தேவன் தம்முடைய ஞானத்தைக்கொண்டு எப்படி உதவினார்?
அன்பான பிதாவே, வாழ்க்கையை மறுரூபமாக்கும் உம்முடைய ஞானத்தினால் என் இருதயத்தை நிரப்பி, உம்மைப் பற்றி மற்றவர்களுக்கு இயல்பாகவும், உண்மையாகவும், தைரியமாகவும் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும்.