கேப் டேஷ்வுட்டும், அவருடைய செல்லமான கருப்பு லாப்ரடார் நாயாகிய சேலாவும் 2019ஆம் ஆண்டு ஒரு மறக்கமுடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளனர். வருடத்தில் 365 நாட்களும் பயணித்து மலையுச்சியை அடைந்து சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
அவரிடத்தில் சொல்லுவதற்கு அழகான கதை ஒன்று உண்டு. “தவறான குடும்ப வாழ்க்கை” என்று சொல்லி, தன்னுடைய 16ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். “நீங்கள் எப்போதாவது மக்களால் மனமடிவாக்கப்பட்டீர்கள் என்றால், நீங்கள் அதை மறந்து வேறொன்றில் கவனம் செலுத்துங்கள்” என்று அவர் சொல்லுகிறார். உங்களுக்குத் தெரியுமா? இந்த நபருக்கு மலையேற்றமும், அவருடைய செல்ல நாயான இந்த கருப்பு லாப்ரடாரின் நிபந்தனையற்ற அன்புமே அவருடைய கவனத்தைத் திசைதிருப்ப உதவியது.
என்னைப்போன்று விலங்குகளை அதிகமாய் நேசிப்பவர்கள், அவைகளை நேசிப்பதற்கு காரணம், எங்குமே கிடைக்காத, அவைகள் கொடுக்கும் இனிமையான, நிபந்தனையற்ற அன்பே. மற்றவர்களின் தோல்விகளைக்காட்டிலும் அவர்கள் சிரத்தையின்றி காண்பிக்கும் அன்பு சிறந்தது. தேவனுடைய அசைக்கமுடியாத, எல்லையில்லாத அன்பே உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது.
சங்கீதம் 143ல், சங்கீதக்காரன் அவருடைய பெரும்பாலான ஜெபங்களில் தேவனுடைய அசையாத நிலையான கிருபையே, அவருடைய தனிமையில் அவருக்கு ஆறுதலாயிருந்துள்ளது என்கிறார் (வச.12). தனது வாழ்க்கை முழுவதும் தேவனோடு நடந்த அனுபவம், “அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும்” என்று நம்புவதற்கு பெலப்படுத்துகிறது (வச. 8).
தேவனை நம்புவதற்கு போதுமான நம்பிக்கையோடு, நமக்கு தெரியாத பாதைகளில் அவருடைய வழிநடத்துதலை சார்ந்துகொள்வோம் (வச. 8).
எந்த வகையான தேவனுடைய நிலையான முடிவில்லாத அன்பின் அடையாளத்தை, இந்த உலகத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள்? தேவனுடைய அன்பை மற்ற மனிதர்கள் மூலமாகவோ அல்லது உங்கள் பிரியத்திற்குரிய விலங்குகள் மூலமாகவோ பார்த்து, நீங்கள் எப்படி தைரியமும் நம்பிக்கையும் அடைந்ததுண்டு?
அன்பான, இரக்கமுள்ள தேவனே, எனக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளின் மத்தியிலும் சுகமாக்குதலை சாத்தியமாக்கியதற்காக நன்றி. அன்பில் நேசிப்பதும் மகிழ்வதும் எப்படி என்பதை எனக்குக் காண்பித்ததற்காக நன்றி. மற்றவர்களுக்கு அந்த நம்பிக்கையின் பிரதிநிதியாய் வாழ்வதற்கு எனக்கு உதவிசெய்யும்.