அவர்கள் தங்களுடைய காரில் ஏறிப்போனபோது, தன் தாயாரின் கைகளிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு தர்ஷன் ஆலயத்தின் கதவை நோக்கி ஓடினான். அவன் அங்கிருந்து வருவதை விரும்பவில்லை. அவனுடைய தாயார் அவன் பின்னாக ஓடி, அவனை தன் கைகளினால் அணைத்து மீண்டும் புறப்படுவதற்கு தயாரானாள். தர்ஷனை அணைத்து, அவனுடைய தாயார் அவனை வெளியே கூட்டிச்செல்லும்போது, அவன் ஆலயத்தை நோக்கி தன் கைகளை நீட்டியவாறு அடம்பிடித்துக்கொண்டே வெளியே சென்றான்.
தர்ஷன், ஆலயத்தில் தனக்கிருக்கும் நண்பர்களை விட்டுப் பிரிய மனதில்லாமல் அப்படி செய்திருக்கலாம். ஆனால் அவனுடைய அந்த ஆர்வம், தாவீது தேவனை ஆராதிக்க காண்பித்த ஆர்வத்திற்கு ஒத்திருக்கிறது. தன்னுடைய நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தன்னுடைய சத்துருக்களை அழிக்கும்படிக்கு தேவனிடத்தில் கெஞ்சினாலும், அவன் சமாதானமாயிருப்பதற்கு, “நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” என்கிறார் (27:4). அவர்; எங்கேயிருந்தாலும் தேவ பிரசன்னத்தை அனுவித்து தேவனோடு இருப்பதையே நாடினான். இஸ்ரவேலின் சிறந்த கதாநாயகனும் படைத்தலைவனுமான தாவீது, “கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்” என்று தன் விருப்பத்தை பிரதிபலிக்கிறான் (வச. 6).
அவர் விசுவாசத்தினால் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்குள் வாசம்பண்ணுகிறார் என்பதினால், நாம் அவரை எங்கு வேண்டுமானாலும் ஆராதிக்கமுடியும் (1 கொரிந்தியர் 3:16; எபேசியர் 3:17). தேவ பிரசன்னத்தில் நம்முடைய நாட்களை கழிக்கவும், மற்ற விசுவாசிகளோடு சேர்ந்து அவரை ஆராதிக்கவும் முற்படுவோம். கட்டடத்தின் சுவரில் அல்ல, தேவனில் நம்முடைய பாதுகாப்பையும் நம்முடைய அதிகப்படியான மகிழ்ச்சியையும் நாம் அடைகிறோம்.
தேவனை ஆராதிக்க நீங்கள் எப்போது ஏங்கினீர்கள்? அதை அடிக்கடி செய்வதற்கு உங்களுக்கு எது தடையாயிருக்கிறது?
தகப்பனே, நீரே என் விருப்பமும் என் மகிழ்ச்சியுமானவர். எந்த தடங்கலும் தடையுமில்லாமல் உம்மை நான் ஆராதிக்க விரும்புகிறேன்.