மோகனும் ரேகாவும் தங்களுடைய ஒரே குழந்தையை இழந்த பின்பு, தங்களை என்னவென்று அழைத்துக்கொள்வதென்று தெரியாமல் கஷ்டப்பட்டனர். குழந்தையை இழந்த பெற்றோர்களை அழைப்பதற்கென்று ஆங்கில வார்த்தை கிடையாது. கணவனை இழந்த மனைவியை விதவை என்று கூறலாம். மனைவியை இழந்த கணவரை அழைப்பதற்கும் ஆங்கிலத்தில் வார்த்தை உண்டு. பெற்றோரை இழந்த குழந்தையையும் அநாதை என்று அழைப்பர். பிள்ளையை இழந்த இந்த பெற்றோர்கள் ஆழ்ந்த மன வேதனையில் இருந்தனர்.
கருச்சிதைவு,. குழந்தையின் திடீர் மரணம், தற்கொலை. வியாதி. விபத்து. மரணம் இந்த உலகத்திலிருந்து குழந்தைகளை இப்படி பல்வேறு விதத்தில் எடுத்துக்கொண்டு, பெற்றோர்களின் அங்கீகாரத்தைப் பறிக்கிறது.
தேவன் தன்னுடைய ஒரேபேறான குமாரன் சிலுவையில் “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46) என்று சொல்லும்போது இந்த ஆழ்ந்த வேதனையை புரிந்துகொண்டார். இயேசுவின் மாம்ச பிறப்பிற்கு முன்பாகவே தேவன் பிதாவாயிருந்தார்; இயேசு தன் கடைசி மூச்சை விடும் வரைக்கும் பிதாவாகவே இருந்தார். இயேசுவின் சரீரம் கல்லறையில் அடக்கம்பண்ணப்படும்போதும் தேவன் பிதாவாகவே இருந்தார். உயிர்த்தெழுந்த குமாரனுக்கு பிதாவாக தேவன் இன்னும் நிலைத்திருக்கிறார். இது பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு மீண்டும் தங்களுடைய பிள்ளைகள் உயிர் வாழும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது.
இந்த உலகத்திற்காகத் தன்னுடைய குமாரனைக் கொடுத்த பரலோகப் பிதாவை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்? அவர் உனக்கும் எனக்கும் தகப்பனே. இன்னும் தகப்பனாகவே இருக்கிறார். நம்முடைய வியாகுலத்தை வெளிப்படுத்தும் துயர சொற்களஞ்சியத்தில் வார்த்தைகள் இல்லாத போதும், தேவன் நம் தகப்பனாயிருக்கிறார் ; நாம் அவருடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் (1 யோவான் 3:1).
தேவன் உங்களுடைய தகப்பனாகவே இருக்கிறார் என்பதையும் அவர் உன்னை பிள்ளை என்று அழைக்கிறார் என்பதையும் நம்புவதற்கு உங்கள் இருதயத்தை எப்படி திருப்புகிறீர்கள்? இந்த எண்ணம் உங்களை எவ்வாறு ஆறுதல்படுத்துகிறது?
அன்பான பரலோகப் பிதாவே, என்னுடைய தகப்பனாய் இருப்பதற்காகவும், என்னை உம்முடைய பிள்ளையாய் ஏற்றுக்கொண்டதற்காகவும் நன்றி.